என்னால் அவர்களுக்குள் ப்ரச்சனை வரக்கூடாது – கவின் திருமணம் பற்றி மனம் திறந்து லாஸ்லியா சொன்ன விஷயம்

0
145
- Advertisement -

கவின் காதல் குறித்து லாஸ்லியா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் இலங்கை நாட்டின் செய்தி தொகுப்பாளராக பணியாற்றியவர். பின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மத்தியில் பிரபலமாகி விட்டார்.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்தது அதோடு நிகழ்ச்சியில் இருக்கும் போது லாஸ்லியா, கவின் இருவரும் காதலித்து இருந்தார்கள். இவர்கள் காதலுக்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து இருந்தார்கள். இவர்களுக்கு என்று ஒரு ஆர்மி உருவாகி இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவர்கள் இருவரும் திருமணம் எல்லாம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

லாஸ்லியா-கவின் காதல்:

இருவருக்குமே செட் ஆகவில்லை என்று பிரிந்து விட்டார்கள். மேலும், கவிலியா காதல் குறித்து பல கிசுகிசுக்கள் வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இருந்தும் இருவரும் அவரவர் வழியில் பயணிக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ‘பிரின்ட்ஷிப்’ படத்தில் நாயகியாக அறிமுகமானார். ஆனால், எதிர்பார்த்தபடி இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.

லாஸ்லியா திரைப்பயணம்:

இதை அடுத்து இவர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ‘கூகுள் குட்டப்பன்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். மலையாளத்தில் ‘ஆண்ட்ரியட் குஞ்சப்பன்’ என்ற பெயரில் வெளியான இந்த படம் மலையாளத்தில் மாபெரும் வெற்றியடைந்தது. ஆனால், தமிழில் இந்த படம் மாபெரும் தோல்வியை தழுவியது. சமீபத்தில் லாஸ்லியா, ‘ஜம்ப் கட்ஸ்’ ஹரிபாஸ்கர் நடிப்பில் வெளியாகி இருந்த மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

லாஸ்லியா பேட்டி:

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் லாஸ்லியா, கவின் ஒரு ஃபேமிலி லைப்பில் போய்விட்டார். நான் பேசும் வார்த்தைகளால் அவருடைய மனைவி, அவருடைய குடும்பம் சார்ந்தவர்கள் பார்த்து அவர்களுடைய வாழ்க்கைள் எந்த பிரச்சினையும் வரக்கூடாது. நான் முடிந்த வரைக்கும் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்தேன். முடிந்தவரை நான் பதில் அளித்து தான் இருக்கிறேன்.

கவின் திருமணம் பற்றி சொன்னது:

பதிலளிக்க முடியாத சூழ்நிலை போது தான் தயவுசெய்து இதை விட்டு விடுங்கள் என்று சொல்லுவேன்.
என்னால் அவர்களுடைய வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று நான் யோசிப்பேன். அவரவர்கள் வாழ்க்கையில் மூவான் ஆகி விட்டோம். இருந்தும் சோசியல் மீடியாவில் என்னை பற்றி தேவையில்லாமல் நெகட்டிவ் கமெண்ட் வருகிறது. அதை பற்றி நான் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. நானும் என்னுடைய கேரியரில் தான் கவனம் செலுத்தி வருகிறேன் என்று கூறி இருக்கிறார்.

Advertisement