50 லட்ச பரிசுப் பணத்தில் மனைவிக்கு என்ன வாங்கி கொடுதீங்க – ராஜு பதில்

0
568
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் ராஜு ஜெயமோகன். இவரின் சொந்த ஊர் திருநெல்வேலி. இவர் பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பை முடித்துவிட்டு பல கனவுகளுடன் சினிமாவுக்குள் நுழைந்தார். இவர் சினிமாவில் இயக்குனரும், நடிகருமான பாக்யராஜின் உதவி இயக்குனராக சில காலம் பணியாற்றியிருந்தார். அதன் பிறகு தான் விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றான கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி, ஆண்டாள் அழகர், பாரதி கண்ணம்மா போன்று பல சீரியலில் நடித்து இருந்தார் .பின்பு கவின் நடிப்பில் வெளிவந்த நட்புனா என்னன்னு தெரியுமா படத்தில் லீட் ரோலில் நடிகர் ராஜூ நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இந்த படம் மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்காததால் ராஜூ மீண்டும் சின்னத்திரை பக்கமே வந்துவிட்டார். மேலும், பல போராட்டங்களுக்கு பிறகு நடிகர் ராஜூ அவர்கள் சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இதனிடையே ராஜு 12 வருடங்களுக்கு மேலாக தாரிகா என்ற பெண்ணை காதலித்து வந்தார். கடந்த ஆண்டு தான் இவர்களுக்கு திருமணம் நடந்தது. பின் சின்னத்திரை பிரபலத்தின் மூலம் ராஜுவுக்கு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ராஜு:

மேலும், பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ராஜு கலந்து கொண்டு திறமையாக விளையாடி வந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் ராஜுவுக்கு ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் சேர்ந்தது. அதோடு இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல மாற்றங்களை கொண்டு வந்து இருந்தார்கள். வழக்கம் போல பிக் பாஸ் வீட்டுக்குள் ஆரம்பத்தில் போட்டியாளர்கள் ஆனந்தம், சந்தோஷம், கும்மாளம் என்று இருந்தாலும் போகப்போக போட்டி சச்சரவு சலசலப்பு என்று இருந்தார்கள்.

பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர் ராஜு:

மேலும், எல்லோரும் எதிர்பார்த்த மாதிரி ராஜு பிக் பாஸ் சீசன் 5ன் டைட்டில் பட்டத்தை தட்டி சென்றார். இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை பிரியங்கா, மூன்றாம் இடம்- பவானி, நான்காவது இடம்- அமீர் பிடித்து உள்ளார்கள். மேலும், டைட்டில் வின்னருக்கு 50 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது. இதை தவிர பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 வாரங்கள் இருந்த ராஜுவிற்கு வாரத்திற்கு ரூ. 1.50 லட்சம் சம்பளம் என்ற அடிப்படையில் 21 லட்சம் வழங்கப்பட்டது. மொத்தமாக 71 லட்சத்தை ராஜு தட்டித் சென்றிருக்கிறார். இதற்கு ராஜு 30 பர்சன்டேஜ் டாக்ஸ் கட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

ராஜு அளித்த பேட்டி:

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிறகு ராஜூ அவர்கள் பல்வேறு சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அந்த வகையில் ராஜு சமீபத்தில் பிரபல சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, என்னுடைய மனைவி தாரிகா எப்போதும் எப்படி இருக்கணும் எப்படி நடந்துக்கணும் என பல விஷயங்களை சொல்லித் தருவார். இந்த 50 லட்ச ரூபாய் பணத்தில் அவளுக்கு என்ன கிப்ட் வாங்கி தருவது பற்றி கேட்டால், இந்த மொத்த பணத்தையும் அவளிடமே கொடுத்து விடுவேன். அதற்கு பிறகு என்ன கிப்ட் வாங்கி தருவது. அவள் எதுவும் என்னிடம் பெரிதாக கேட்கமாட்டாள்.

பிக் பாஸ் பரிசு பணத்தை பற்றி ராஜு சொன்னது:

நாங்கள் காதல் செய்யும் போதும் சரி அவள் தான் எனக்கு எல்லாமே வாங்கி தருவாள். என்னை பார்த்துக் கொண்டது மட்டும் இல்லாமல், ஷர்ட், ஷூ, வேறு எந்த பொருளாக இருந்தாலும் அவள் தான் வாங்கி தருவாள். அதுமட்டுமில்லாமல் அவள் பெரிதாக எதுவும் ஆசைப்பட மாட்டார். ரொம்ப எளிமையான விஷயங்கள் தான் அவளுக்கு ரொம்ப பிடிக்கும். உதாரணத்திற்கு அழகான இடத்திற்கு செல்வது, கார் ஓட்டுவது, கோயிலுக்கு செல்வது என இந்த மாதிரியான விஷயங்கள் தான் அவளுக்கு ரொம்ப பிடிக்கும். அப்படியே அவளுக்கு ஏதாவது வாங்கி தரணும் என்று நினைத்தால் யோசித்து தான் வாங்கணும்.

ராஜுவின் பட வாய்ப்பு:

அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படவாய்ப்புகள் நிறைய வருகிறது. ஏழு நாட்கள் குவராடைன் முடிந்த பிறகுதான் வெளியே போகணும் என்று சொன்னார்கள். அதனால் எல்லாம் முடிந்த பிறகு பட வாய்ப்புகளை பற்றி பேசி முடிவு எடுக்கணும் என்று கூறியிருந்தார். இப்படி ராஜு பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஆகவே இந்த ஆண்டில் ராஜு படங்களில் கமிட்டாகி விடுவார் என்று கூறப்படுகிறது.

Advertisement