கடந்த சில நாட்களாக #metoo விவகாரம் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், பல்வேறு பிரபலங்களும் தங்களுக்கும் நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளிப்படையாக கூறி வருகின்றனர்.
அந்த வகையில் சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்த பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் டைட்டில் விண்ணரும் பிரபல தமிழ் திரைப்பட நடிகையுமான ரித்விகா தனுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து பேசியுள்ளார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை ரித்விகா இதுகுறித்து பேசுகையில், எனக்கும் சிறு வயதில் பாலியல் தொல்லை நேர்ந்துள்ளது. நான் பள்ளிப்படிப்பை படித்துக்கொண்டிருக்கும் வயதில் என்னுடைய வீட்டின் அருகில் இருந்த ஒருவர் என்னிடம் தப்பாக நடந்து கொண்டார்.
அப்போது எனக்கு சிறு வயது என்பதால் அதை பற்றி எனக்கு சரியாக தெரியவில்லை. ஆனால்,நான் ஓரளவிற்கு முதிர்ச்சி அடைந்த பின்னர் தான் அவர் செய்த்து தவறு என்று எங்கே தெரிந்தது. தற்போது பாலியல் தொல்லை குறித்து பெண்கள் வெளிப்படையாக பேசி வருவது நல்ல விஷயம் தான்.
நடிகை வரலக்ஷ்மி போன்றவர்கள் #metoo விஷயத்தில் சிறப்பாக செய்து வருகிறார். முதலில் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கேட்ட தொடுதல்(good touch ,bad touch) என்பதை சொல்லி தரவேண்டும். குழந்தையிலிருந்தே அதை அவர்களுக்கு சொல்லிக்கொடுத்தால் அவர்களுக்கு இது போன்ற தொல்லைகள் இருக்காது என்று பேசியுள்ளார் ரித்விகா.