விஷால் உடனான காதல் குறித்து பிக் பாஸ் தர்ஷிகா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி 79 நாட்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.

இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள். இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி, ரியா, சிவகுமார், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, தர்ஷிகா, ரஞ்சித் ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.
பிக் பாஸ் 8:
மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டு வருவதால் போட்டியாளர்கள் மத்தியில் போட்டியும் பொறாமையும் வெடித்துக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் கடந்த வாரம் கொடுத்த டாஸ்கில் ராணவுக்கு தோள்பட்டையில் பயங்கரமாக அடிபட்டு இருந்தது. சிகிச்சைக்கு பின் ராணவ் மூன்று வாரத்திற்கு ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று மருத்துவர் சொன்னதாக பிக் பாஸ் கூறியிருந்தார். இதை அடுத்து கேப்டன்சி டாஸ்க்கில் முத்துக்குமரன், பவித்ராவுக்காக விட்டுக் கொடுத்திருந்தார். இதனால் பிக் பாஸ் கேப்டன்சி டாஸ்கை ரத்து செய்து இருந்தார்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:
இதனால் முத்துக்குமரன் மனமுடைந்து மன்னிப்பு கேட்டும் பிக் பாஸ் அதைக் கண்டு கொள்ளவே இல்லை. மேலும், இந்த 12 வது வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் அன்ஷிதா, ஜெப்ரி, ஜாக்லின், மஞ்ஜரி, ராணவ், விஷால், பவித்ரா ஆகியோர் பெயர்கள் இடம் பிடித்து இருக்கிறது. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் டாஸ்க் நடைபெறுகிறது.இது ஒரு பக்கம் இருக்க, பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் காதல் ஜோடி வருவது வழக்கம் தான். ஆரவ்- ஓவியா, கவின் லாஸ்லியாவை தொடர்ந்து இந்த எட்டாவது சீசனில் விஷால்-தர்ஷிகா காதல் ஜோடி உருவாகி இருந்தது.
#Tharshika about #VJVishal in BB Unlimited 💥💥#VJVishal is crush, Pudikkum but love pannala 🤝#BiggBossTamil8 #BiggBoss8Tamil #BiggBossTamilSeason8 #BBMama
— BB Mama (@SriniMama1) December 23, 2024
pic.twitter.com/k08uPMQoBJ
தர்ஷிகா பேட்டி:
இவர்கள் இருவரும் காதலிக்க தொடங்கிய சில நாட்களிலேயே தர்ஷிகா நிகழ்ச்சியை விட்டு வெளியேறி விட்டார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தர்ஷிகா விஜய் டிவியின் பிக் பாஸ் அன்லிமிடெட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அதில் அவரிடம் தொகுப்பாளர், விஷாலை நீங்கள் காதலிக்கிறீர்களா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு தர்ஷிகா, விஷால் மீது கிரஷ் இருக்கிறது. அவரை பிடிக்கும். ஆனால், நான் காதலிக்கவில்லை என்று வெளிப்படையாக கூறுகிறார்.

தர்ஷிகா குறித்த தகவல்:
சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தர்ஷிகா. இவர் நிறைய சீரியல்களில் வில்லி ரோலில் நடித்திருந்தார். கடைசியாக இவர் பொன்னி சீரியல் தான் நடித்திருந்தார். அதற்கு பிறகு தான் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. தான் யார் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆரம்பத்தில் இவர் நிகழ்ச்சியில் நன்றாகத்தான் விளையாடி வந்தார். நாட்கள் செல்ல செல்ல இவர் விஷால் உடன் சேர்ந்து கொண்டு சுற்றி இருந்தார். இதனாலே இவர் விளையாட்டில் கவனம் செலுத்தவில்லை. இவர் வெளியேறியதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.






