விஜய் டீவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் எபிசோட் நூறுநாட்களை முடிவடைந்துவிட்ட நிலையில் கடந்த சனிக்கிழமை முதல் எபிசோடின் வெற்றியாளராக ஆரவ் அறிவிக்கப்பட்டார்.
சினேகன் மற்றும் கணேஷை பின்னுக்கு தள்ளி ஆரவ் முதல் பரிசை தட்டிச்சென்றார்.
இந்நிலையில் இறுதிநாளன்று பிக்பாஸ் போட்டியாளர்கள் பெரும்பாலானோர் கலந்துகொண்டிருந்தனர்.
ஓவியா,காயத்ரி,ஜூலி ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
அப்போது ஆரவ்விற்கு வழங்கப்பட்ட பிக்பாஸ் டைட்டில் வின்னர் டிராபியை கையில் வைத்துக்கொண்டு ஒரு புகைப்படம் எடுத்துள்ளார்.
பின்னர் அந்த புகைப்படத்தை தனது டிவிட்டரிலும் பதிவேற்றம் செய்து தம்பியின் வெற்றிக்கோப்பை என்று எழுதியுள்ளார்.
இதில் பின்னூட்டமிட்டு வரும் பிக்பாஸ் ரசிகர்கள் மற்றும் ஓவியா ஆர்மியினர் காயத்ரியை வறுத்தெடுத்து வருகின்றனர்.
இதெல்லாம் எவ்ளோ பெரிய கேவலம் தெரியுமா போன்ற மீம்ஸ்களையும் தொடர்ந்து கமெண்டுகளாக போட்டு வருகின்றனர்.
யோவ் பாவம்யா காயத்ரீ அதான் நிகழ்ச்சியே முடிஞ்சு போச்சுல இனியாச்சும் சும்மா விடுங்களேன்யா 🙂