பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர். ! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0
737
bigbos
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் ஆகும் நபரின் பெயர் நாளை பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியாகும் என்று மக்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். கடந்த வாரம் நடந்த டாஸ்கில் மோசமாக விளையாடினார்கள் என்று பாலாஜி, டேனி, ஜனனி ஆகியோர் நேரடியாக நாமினேட் செய்யப்பட்டிருந்தனர்.

-விளம்பரம்-

இதில் இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என்று மக்கள் ஏற்கனவே தீர்மானித்திருப்பார்கள். அந்த வகையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து டேனி வெளியேற்ற பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வாரம் நடைபெற்ற வாக்களிப்பில் பாலாஜி மற்றும் ஜனனியை விட டேனிக்கும் தான் மிகவும் கம்மியான வாக்குகள் பதிவாகியுள்ளது.

- Advertisement -

daniel

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய போது டேனி மீது மக்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால், இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்தே நாளிலிருந்தே டேனி, ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவிற்கு தான் எப்போதும் ஆதரவாக நடந்து வந்து கொண்டிருந்தார். அவர்கள் என்ன தவறு செய்தலும் டேனி கண்டுகொள்ளாமல் தான் இருந்தார். இது டேனி மீது ரசிகர்களுக்கு எரிச்சல் ஏற்பட ஒரு முக்கிய காரணமாக இருந்து வந்தது.

-விளம்பரம்-

ஆனால்,ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவிடம் மிகவும் நெருக்கமாக இருந்த மஹத் வெளியேறியதும் சற்று உஷாரான டேனி அதன் பின்னர் இருவரையும் தவிர்க்க தொடங்கினார். இப்போது அவர்களுக்கு எதிராக இருக்கும் மும்தாஜ் பக்கம் சென்று விட்டார். இதுபோன்ற செயல்களால் டேனி மீது போட்டியாளர்களும் மற்றும் ரசிகர்களும் சரி டேனி மீது வெறுப்படைந்தனர்.

dan

இந்த காரணத்தால் தான் டேனி இந்த வாரம் ரசிகர்களால் காப்பாற்றபடாமல் போய் விட்டார். அதே போல மஹத் வெளியேறிய போது கூட ஏவிக்ஷனில் இருந்த டேனிக்கு தான் மஹத்திற்கு அடுத்தபடியாக கம்மியான வாக்குகள் பதிவாகி இருந்தது. ஒருவேளை கடந்த வாரம் மஹத் ஏவிக்ஷனில் இல்லாமல் இருந்திருந்தால் டேனி கடந்த வாரமே வெளியேறி இருப்பார்.

Advertisement