50 லட்சம் பரிசு பணம் பற்றி தீயாய் பரவும் வதந்தி..! முற்றுப்புள்ளி வைத்த ரித்விகா..!

0
409
Rithvika

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த சீசனில் இடத்தில் வந்த ரித்விகாவிற்கு 50 லட்ச ரூபாய் பணமும் கோப்பையும் வழங்கப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த ரித்விகா பல்வேறு பேட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

Rithvika

கடந்த ஓராண்டுக்கு படவாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்து வந்த ரித்விகா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தின் மூலம் அரை டசன் படத்தில் கமிட் ஆகியுள்ளார். தற்போது நடிகை ரித்விகா, “டார்ச் லைட், சிகை, நேத்ர, மாடு” போன்ற பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

அது போக நடிகை ரித்விகா பிக் பாஸ் நிகழ்ச்சியில் வென்ற பணத்தில் இருந்து ஒரு பகுதியை ஆதரவற்ற குழந்தைகளுக்கு கொடுத்து உதவி செய்துள்ளார் என்றும் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார் என்றும் சில செய்திகள் பரவி வருகிறது.

ஆனால், இது வெறும் வதந்தி என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை ரித்விகா, நான் பல்வேறு அமைப்பிற்கு உதவி செய்கிறேன் என்றும் பல படங்களில் நடித்து வருகிறேன் என்றும் ஒரு சில வதந்திகள் பரவி வருகிறது. விரைவில் இது குறித்த தகவல்களை நானே எனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கிறேன் என்று விளக்கமளித்துள்ளார்.