யாஷிகாவை தடுத்த ஐஸ்வர்யா..! வெளியேறிய யாஷிகாவுக்கு மேடையில் கமல் சொன்ன வார்த்தை..!

0
945
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி வாரத்தை நெருங்கியுள்ள நிலையில் இன்னும் 5 போட்டியாரல்களே மீதம் உள்ளனர். ஜனனி இறுதி சுற்றிற்கு நேரடியாக தகுதி பெற்ற நிலையில் ரித்விகா, பாலாஜி, ஐஸ்வர்யா, விஜயலக்ஷ்மி, யாஷிகா ஆகியயோர் இந்த வாரம் நேரடியாக நாமினேட் செய்யப்ட்டிருந்தனர்.

-விளம்பரம்-

Balaji

- Advertisement -

இந்த வாரம் இரண்டு எவிக்ஷன் என்பதால் நேற்று பாலாஜி முதல் போட்டியாளராக வெளியேற்றபட்டார். அதே போல நேற்று ரித்விகா காப்பற்றபட்டதாக அறிவித்திருந்தார் கமல். இதில் மீதமுள்ள ஐஸ்வர்யா, யாஷிகா, விஜயலகஷ்மி ஆகியோரில் யாஷிகா வெளியேற்றபட்டுவிட்டார் என்று நேற்றே நமது வலைதள பக்கத்தில் அறிவித்திருந்தோம்.

இந்த வாரமும் ஐஸ்வர்யா வெளியேற்றபடமால் இருப்பது மக்களுக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ள நிலையில் யாஷிகா வெளியேறியது தான் அனைவருக்கும் ஆச்சர்யமான ஒன்றாக இருக்கிறது. எப்படி சென்ராயன் வெளியேற்றத்தின் போது ஐஸ்வர்யா காப்பற்றபட்டதற்கு கமல் சப்பைகட்டு கட்டினாரோ இந்த வாரம் யாஷிகாவின் பெயரை அறிவிப்பதற்கு முன்பாக விஜயலட்சுமி எவிக்ஷனில் இருந்து காப்பற்றபட்டார் என்று அறிவிக்கிறார் கமல்.

-விளம்பரம்-

Kamal

பின்னர் ஐஸ்வர்யா, யாஷிகா ஆகிய இருவரில் யார் எவிக்ஷன் என்று பார்க்கலாமா என்று கேட்கும் போது அனைவரின் கவனமும் ஐஸ்வர்யாவின் பக்கம் திருப்பியது. ஐஸ்வர்யாவும் நாம தான் எலிமினேஷன் என்று நினைத்துக்கொண்டிருக்க கமல் பார்வையாளர்களை பார்த்து, நீங்க தான் நான் எத்தனை முறை சொன்னாலும் கேட்கமாட்ரீங்களே, ஐஸ்வர்யா நீங்க சேவ் ஒக்காருங்க என்றதும் அரங்கமே நிசப்தமானது.

அதன் பின்னர் யாஷிகா தான் எலிமினேட் என்று கமல் எலிமினேஷன் அட்டையை காண்பித்ததும் தனது தோழி வெளியேறிவிட்டார் என்று ஐஸ்வர்யா கதறி அழ ஆரம்பித்துவிட்டார். யாஷிகா வெளியே போக வேண்டாம் அவருக்கு பதிலாக நான் போகிறேன் என்று வழக்கம் போல எமோஷனல் டிராமா ஆடினார் ஐஸ்வர்யா. வழக்கம் போல நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுபவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பும் கமல், யாஷிகாவிடம் உள்ள இருக்கிற போட்டியாளர்களிலேயே நீங்கள் தான் பலமான போட்டியாளர் என்றும், இந்த சின்ன வயதிலேயே நல்ல முதிர்ச்சியான நடந்து கொள்கிறீர்கள் வெளியே சென்றதும் உங்களுக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று அறிவுரை கூறி வழியனுப்பி வைக்கிறார் காமல். இந்த காட்சிகள் தான் இன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் அதே இன்று நீங்களே காணலாம்.

Advertisement