ஹிந்தி பிக் பாஸில் ஸ்ருத்திகாவை வெளுத்து வாங்கிய பாலிவுட் பிரபலம், காரணம் என்ன?

0
171
- Advertisement -

ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் ஸ்ருத்திகாவை பாலிவுட் பிரபலம் வெளுத்து வாங்கியிருக்கும் வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஹிந்தியில் ஒளிபரப்பப்படும் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் ஒன்று. இந்த நிகழ்ச்சி ஹிந்தியில் தான் முதன்முதலாக ஒளிபரப்பப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழில் பிரம்மாண்டமாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை ஏழு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது.

-விளம்பரம்-

தற்போது எட்டாவது சீசன் தொடங்கி, சிறப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. இம்முறை இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். அதேபோல் தற்போது ஹிந்தி பிக் பாஸ் 18 நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது ‌. இந்த நிகழ்ச்சியை வழக்கம் போல் சல்மான் கான் தான் தொகுத்து வழங்குகிறார். இந்த முறை நடிகை ஸ்ருத்திகா ஹிந்தி பிக் பாஸில் போட்டியாளராக பங்கேற்று உள்ளார். இவர் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியாகியிருந்த ‘ஸ்ரீ’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.

- Advertisement -

ஸ்ருத்திகா குறித்து :

அதற்குப் பிறகு இவர் சில படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், இவருக்கு சினிமாவில் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அதற்குப் பிறகு இவர் தனியாக youtube சேனலை தொடங்கி இருக்கிறார். அதில் எக்கச்சக்கமான ரசிகர்கள் இவரை பாலோ செய்கிறார்கள்.

பிக் பாஸில் ஸ்ருத்திகா:

தற்போது ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டிருக்கிறார். இதன் மூலம் ஹிந்தியில் கலந்து கொள்ளும் முதல் தமிழ் பெண் என்ற பெருமையை ஸ்ருத்திகா பெற்றிருக்கிறார். இவரின் அடையாளமே வெகுளியான பேச்சும் குறும்புத்தனமும் தான். அதனால் முதல் நாளே இவர் தன்னுடைய சேட்டைகளால் சல்மான் கானை கவர்ந்தார். பின், ‘சும்மா’ என்ற தமிழ் வார்த்தையை ஹிந்தி பிக் பாஸில் பேசி, யார் இந்த ஸ்ருத்திகா என ஹிந்தி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்யும் அளவுக்கு இவர் மாறினார்.

-விளம்பரம்-

கதறி அழுத ஸ்ருத்திகா:

ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஸ்ருத்திகா கதறி அழும் வீடியோ இணையத்தில் வைரலாகி இருந்தது. அதாவது இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே, இவரின் நெருங்கிய தோழியாக இருப்பவர் Chum Darang என்பவர். இவர்கள் இருவரும் நல்ல தோழிகளாக வீட்டிற்குள் பழகி வந்த நிலையில், சில காரணங்களால் இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. அதனால் ஸ்ருத்திகா மனம் உடைந்து கதறி நடு இரவில் அழுந்தது பரபரப்பாக பேசப்பட்டது.

வெளுத்து வாங்கிய ஃபரா கான்:

அதைத்தொடர்ந்து, தற்போது இவர் குரூப்பிஸம் பஞ்சாயத்தில் சிக்கி இருக்கிறார். அதாவது இந்த பிக் பாஸ் சீசனில் கரண் வீர் மெஹ்ரா என்பவர் சிறப்பாக விளையாடுவதாக குறிப்பிடுகிறது. ஆனால், அவரை ஸ்ருத்திகாவும் அவருடைய தோழி இஷா சிங்கும் சேர்ந்து கார்னர் செய்வதாக சில நாட்களாக ஒரு சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் இதை சுட்டிக் காட்டி பிரபல பாலிவுட் இயக்குனரும் நடன இயக்குனருமான ஃபரா கான் ஸ்ருத்திகாவின் முகத்துக்கு நேராக கேள்வி எழுப்பியிருக்கிறார். ஃபரா கானின் இந்த செயலுக்கு நெடிசன்கள் மத்தியில் பெரும் ஆதரவும் பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளது.

Advertisement