ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஸ்ருத்திகா வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் ஒளிபரப்பப்படும் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் ஒன்று. இந்த நிகழ்ச்சியை ஹிந்தியில் தான் முதன் முதலாக ஒளிபரப்பப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி போன்ற பல மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழில் பிரம்மாண்டமாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை ஏழு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது.
தற்போது எட்டாவது சீசன் சென்று கொண்டு இருக்கிறது. இம்முறை இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். அதேபோல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹிந்தி பிக் பாஸ் 18 தொடங்கி இருந்தது. இந்த நிகழ்ச்சியை வழக்கம்போல் சல்மான் கான் தான் தொகுத்து வழங்குகிறார். இந்த முறை ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் பிரபலம் கலந்து இருக்கிறார். அவர் வேற யாரும் இல்லை, நடிகை ஸ்ருத்திகா தான்.
ஸ்ருத்திகா குறித்த தகவல் :
ஸ்ருத்திகா தமிழில் சூர்யா நடிப்பில் வெளியாகியிருந்த ‘ஸ்ரீ’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அதற்குப் பிறகு இவர் சில படங்களில் நடித்திருந்தார். ஆனால், இவருக்கு சினிமாவில் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். அதன் பின், சில வருடங்களுக்கு பிறகு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த ‘குக் வித் கோமாளி’ என்ற சமையல் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து இருந்தார்.
பிக் பாஸில் ஸ்ருத்திகா:
இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அதற்குப் பிறகு இவர் தனியாக youtube சேனலை தொடங்கி இருந்தார். அதில் எக்கச்சக்கமான ரசிகர்கள் இவரை பாலோ செய்கிறார்கள். இதன் மூலம் இவருக்கு ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அதோடு ஹிந்தியில் கலந்து கொள்ளும் முதல் தமிழ் பெண் என்ற பெருமையை ஸ்ருத்திகா பெற்றிருக்கிறார். இவரின் அடையாளமே வெகுளியான பேச்சும், குறும்புத்தனமும் தான். அதனால் முதல் நாளே இவர் தன்னுடைய சேட்டைகளால் சல்மான் கானை கவர்ந்தார்.
ஸ்ருத்திகா வெளியேற்றம் :
மேலும், பிக் பாஸ் வீட்டில் இவரின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தன. ஒவ்வொரு எபிசோடிலும் இவருக்கு ரசிகர்கள் பெருகினர். கடினமான டாஸ்க்களை கூட இவர் துணிச்சலாக எதிர்கொண்டார். விளையாட்டுகளில் சரியான ஐடியாவை உருவாக்கி கலக்கினார். பல சந்தர்ப்பங்களில் உணர்ச்சிவசப்பட்ட ஸ்ருத்திகா மகிழ்ச்சியிலும் சோகத்திலும் இயல்பாக வெளிப்பட்டார். இவரின் வெளிப்படையான பேச்சு தமிழ் ரசிகர்களை மட்டும் இல்லாமல் பிற மாநில ரசிகர்களையும் கவர்ந்தது. ஆனால், ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் 13 வாரங்கள், 3 நாட்கள் இருந்த ஸ்ருத்திகா திடீரென வெளியற்றப்பட்டார்.
ஸ்ருத்திகா வாங்கிய சம்பளம்:
இவரின் எலிமினேஷன் ரசிகர்கள் பலரையும் வருத்தமடைய செய்திருந்தது. இந்நிலையில், தற்போது ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரது சம்பளம் எவ்வளவு என்பது தான் பேசும் பொருளாக மாறியுள்ளது. இவர் ஒரு வாரத்துக்கு ரூபாய் 1.5 லட்சம் வரை சம்பளம் பெற்றார் என சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மொத்தமாக ஹிந்தி பிக் பாஸ் 18 ஆவது சீசனில் கலந்து கொள்ள சுமார் 20 லட்சம் ரூபாய் வரை ஸ்ருத்திகாவுக்கு சம்பளமாக கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.