பிக்பாஸ் 2’வில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பட்டியல் இதோ..! இருட்டு அறையில் முரட்டுக் குத்து நடிகையுமா ?

0
3615
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி ஹிந்தியில் 11 சீஸன்களை கடந்து சென்றிருக்கிறது. ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் தான் தமிழில் பிக் பாஸின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மிகவும் பிரபலமான நடிகர்களையே அணுகிவந்தனர் . பின்னர் கமலஹாசனே இந்த சீஸனையும் தொகுத்துவழங்க இருப்பது உறுதியாகியுள்ளது.

-விளம்பரம்-

actor-bharath

- Advertisement -

கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் மூலம் பல்வேறு நபர்கள் மிக பெரிய பிரபலமாக மாறிவிட்டனர். அந்த நிகழ்ச்சியின் மூலம் நேற்று வரை எங்கேயோ இருந்த ஒரு சில நபர்கள் தற்போது தொலைக்காட்சி, சினிமா என்று புகழின் உச்சிக்கு சென்று விட்டனர். தற்போது பிக் பாஸ் 2 வில் பங்குபெறும் பட்டியில் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த பிக் பாஸ் 2 தொடரில் பல்வறு நடிகைகள் மற்றும் விஜய் டிவியில் ஒரு சில நடிகைகளும் பங்கு பெறுவார்கள் என்று தகவல்கள் வந்துள்ளது. அதில் சினிமா நடிகைகளான கஸ்தூரி, இனியா, பிரியா ஆனந்த், பூனம் பாஜிவா, ஜனனி ஐயர், லட்சுமிராய் போன்ற நடிகைகளும்.

-விளம்பரம்-

yashika

நடிகர்களை பொறுத்த வரை பரத், ஜித்தன் ரமேஷ், படவா கோபி, ஜான் விஜய், பிரேம் ஜி, பிளாக் பாண்டி, தாடி பாலாஜி, அமித் பார்கவ் போன்ற பல நட்சத்திரங்கள் கலந்து கொள்வார்கள் என்று குறைப்படுகிறது. மேலும் இந்த சீசனில் போனஸாக இருட்டு அறையில் முரட்டு குத்து பட நடிகை யாஷிகா ஆனந்த்-வும் இந்த சீசனில் கலந்து கொள்ள வைப்புள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

கடந்த ஆண்டு விஜய் டிவியில் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் தான் அரசியலுக்கு வரப்போவதாக மறைமுகமாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also read in English about Yashika Anand

Advertisement