தொலைக்காட்சிகளில் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் அதில் ஒரு சில நிகழ்ச்சிகள் மட்டுமே பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தியில் பல சீசன்களை கடந்து இந்த நிகழ்ச்சி கடந்த 2011-ம் ஆண்டு தான் தமிழில் ஒளிபரப்பானதும் அதன் பின்னர் தெலுங்கு கன்னடம், மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் எப்போது துவங்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகின்றனர்.
இதையும் படியுங்க : விஜய் டீவியுடன் ஒப்பந்தம் முடிந்தது.!தமிழ் பிக் பாஸ் 3 குறித்து பேசிய எண்டிமால் நிறுவனர்.!
இந்த நிகழ்ச்சியை என் டி இமான் என்ற நிறுவனம்தான் தயாரித்து வருகின்றது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழ் பிக் பாஸ் 3 இந்நிகழ்ச்சியில் அறிவிப்பை இந்த நிறுவனத்தின் தலைவர் வெளியிட்டு இருந்தார். அதில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் ஒளிபரப்பு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் பிக்பாஸ் திரை நிகழ்ச்சியில் பங்கு பெறப் போகும் போட்டியாளர்கள் பற்றிய விபரங்களும் அடிக்கடி நமக்கு கிடைக்கப் பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகை கஸ்தூரி பங்கு பெறப் போவதாக ஏற்கனவே ஒரு தகவலை நமது வலைதளத்தில் தெரிவித்திருந்தோம். தற்போது அடுத்த போட்டியாளராக பிரபல நடிகை சூசன் இடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.மைனா படத்தில் வில்லியாக நடித்து சூழ்வெளியை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு சில நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது