செம்பருத்தி சீரியலில் இருந்து கார்த்தி விலக்கப்பட்டாரா ? இல்லை விலகினாரா? காரணத்தை அன்றே சொன்ன ஜனனி.

0
19887
sembaruti
- Advertisement -

செம்பருத்தி சீரியலில் இருந்து கார்த்திக் மாற்றப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் இல்லத்தரசிகள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று விடுகிறது. அந்த வகையில் மக்களிடையே அதிக ஆதரவும்,அன்பும் பெற்ற சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் தான். இப்போது இருக்கும் டாப் சீரியல்களில் செம்பருத்தி சீரியலும் ஒன்று. இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடரில் ஆதித்யா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக்கும், பார்வதி என்ற கதாபாத்திரத்தில் சபானாவும், அவருக்கு ஜோடியாக ஆபிஸ் புகழ் கார்த்தியும் நடிக்கின்றனர்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-73-1024x1016.jpg

ற்போது 800 எபிசோடுகளைக் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியல் ஹீரோ கார்த்திக் தானாகவே வெளியேறி இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தது. செம்பருத்தி சீரியலில் இருந்து கார்த்திக் வெளியேறுவதாக வெளியான தகவலை அடுத்து செம்பருத்தி சீரியல் ரசிகர்கள் பலரும் அதிருப்தி அடைந்தவர்கள் அதேபோல கடந்த 9 நாட்களுக்கும் மேலாக செம்பருத்தி சீரியலில் நாயகன் கார்த்திக் இல்லாமலேயே துணை கதாபாத்திரங்களை வைத்து கதை நகர்ந்து வந்தது இதனால் கடுப்பான செம்பருத்தி சீரியல் நடிகர்கள் பலரும் கார்த்தி இந்த சீரியலில் தொடர்வதா இல்லையா கார்த்திக் நடிக்கவில்லை என்றால் செம்பருத்தி சீரியல் புறக்கணிப்போம் என்று கொந்தளித்து வந்தார்கள் ஆனால் ரசிகர்களின் எந்த கேள்விக்கும் ஜீ தமிழ் விளக்கம் அளிக்காமல் மவுனம் சாதித்து வந்தது

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் கார்த்தி செம்பருத்தி சீரியலில் இருந்து நீக்கப்பட்டதை உறுதி செய்யும் விதமாக ஜீ தமிழ் தொலைக்காட்சி அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது இந்த தொடரை ஒரு மாபெரும் வெற்றி தொடராக மாற்றிய அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி அதேபோல் இந்த சீரியல் இந்த அளவிற்கு வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்த கார்த்திக்கும் எங்கள் பாராட்டுக்கள் ஆனால் இந்த தொடரில் இருந்து ஒரு சில எதிர்பாராத காரணங்களுக்காக கார்த்திக் மாற்றப்பட்டு இருக்கிறார். ஜீதமிழ் உடனான அவரது தொடர்பு மேலும் நீடிக்கும் அவரது பயணத்திற்கு எங்களுடைய வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டிருக்கிறது.

கார்த்திக் விலகினரா? இல்லை நீக்கப்பட்டாரா ? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்து உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் இந்த சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜனனி நீக்கப்ட்டு இருந்தார். அதன் பின்னர் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஜனனியிடம், செம்பருத்தி சீரியலில் இருந்து யாரை மாற்ற வேண்டும் என்று கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. அதற்கு பதில் அளித்திருந்த ஜனனி, நான் ஆதியை தான் சொல்வேன். அவருக்கு சீரியலில் நடிக்க ஆசை இல்லை, படங்களில் நடிக்க தான் ஆசை என்று கூறி இருந்தார். தற்போது அவர் சொன்னது போலவே தான் கார்த்தி இந்த சீரியலில் இருந்து வெளியேறி படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டாரோ என்னவோ.

-விளம்பரம்-
Advertisement