பிக் பாஸ்ஸின் 100 நாள் கொண்டாட்டம் ஒரே நாளில். வெளியான வீடியோ இதோ.

0
3643
Bigg-Boss
- Advertisement -

விஜய் டிவியில் தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சமீபத்தில் தான் திருவிழா போன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு சிறப்பாக முடிவடைந்தது. மேலும், இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இந்த அளவிற்கு பல பிரபலமானதற்கு முக்கியமான காரணம் என்று பார்த்தால் மற்ற சீசன்களை விட இந்த சீசன் காதல்கள், சண்டைகள்,சர்ச்சைகள் ஆகியவற்றிக்கு பஞ்சம் இல்லை. மேலும்,முகென் தன்னுடைய வீடா முயற்சியாலும், தன் நம்பிக்கையாலும் பிக் பாஸில் சிறப்பாக விளையாடி பிக் பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னரும் ஆனார். மேலும்,இரண்டாம் இடத்தை சாண்டியும்,மூன்றாவது இடத்தை லாஸ்லியாவும் பிடித்து உள்ளார்கள். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் கொண்டாட்டம் குறித்து ரசிகர்கள் ஆவலுடன் உள்ளார்கள். அதோடு இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மத்த ரெண்டு சீசன்களை விட ரசிகர்களை தெறிக்கவிட்டது கூட சொல்லலாம். அது மட்டும் இல்லாமல் இந்த பிக் பாஸ் சீசன் 3க்கு என ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

-விளம்பரம்-

அதோடு இந்த பிக் பாஸ் சீசன்3 நிகழ்ச்சி இந்திய அளவில் மட்டும் இல்லாமல் உலக அளவில் உள்ள ரசிகர்களையும் ஈர்த்தது என்று கூட சொல்லலாம். மேலும், இதில் பிக்பாஸில் பங்குபெற்ற போட்டியாளர்கள் அனைவரும் பிக் பாஸ் கொண்டாட்டத்தில் பங்குபெற உள்ளார்கள். அதோட பாய்ஸ் அணியை சந்திக்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் கொண்டாட்டம் படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்றது நம் அனைவருக்கும் தெரிந்ததே. இதில் முகென் பாட்டு பாடுகிறார். லாஸ்லியா,கவின், சாண்டி எல்லாம் நடனமாடுகிறார்கள். தர்சன்,ஷெரின் இருவரும் சேர்ந்து நடனம் ஆடி உள்ளார் என்ற தகவல் வந்துள்ளது. பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி முடிந்த உடனேயே போட்டியாளர்கள் அனைவரும் பல நேர்காணலிலும், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று சந்தோஷமாக கொண்டாடி வருகின்றனர்.

இதையும் பாருங்க : துப்பாக்கி படத்தில் அந்த மாதிரி பெண்ணாக நடித்த நடிகை. நிஜத்திலும் இப்படியா ?

- Advertisement -

இந்தநிலையில் கடந்த மாதம் தான் பிக் பாஸ் கொண்டாட்டத்தின் நிகழ்ச்சிக்கான நடனப் பயிற்சிகள் எல்லாம் நடந்து முடிந்தது. மேலும்,போட்டியாளர்கள் பயிற்சி செய்த ஆடல்,பாடல் எல்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சி கொண்டாட்டத்தின் மேடையில் அரங்கேற்றினார்கள். இதனை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி கொண்டாட்டத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிவடைந்து விட்டது. மேலும்,பிக்பாஸ் நிகழ்ச்சி கொண்டாட்டத்தை விஜய் டிவியில் எப்போது ஒளிபரப்பு செய்யப் போகிறார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொண்டாட்டம் குறித்த ப்ரோமோக்கள் இணையங்களிலும், சேனலிலும் வெளியாகி உள்ளது. மேலும்,இதை பார்த்தவுடன் ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடி வருகிறார்கள்.

அதுவும் பிக் பாஸ் கொண்டாட்டம் வருகிற நவம்பர் 3ஆம் தேதி 3.30 மணி அளவில் பிரம்மாண்டமான அளவில் விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்று அறிவித்தார்கள். மேலும், அதைப் பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றன என்ற தகவலும் வெளிவருகின்றன. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கொண்டாட்டத்தில் போட்டியாளர்கள் அனைவரும் பங்கு பெற்று தங்களுடைய நடன திறமைகளை வெளிப்படுத்தி உள்ளார்கள் என்பது அனைவருக்கும் புரோமோவை பார்க்கும் போது தெரியவந்துள்ளது. மேலும், இதில் கவின்,லாஸ்லியா தங்கள் காதல் குறித்து என்ன சொல்லப் போகிறார்கள்? என்றும், நிகழ்ச்சிக்கு பிறகு போட்டியாளர்கள் என்னென்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அறிந்து கொள்வதற்காக ரசிகர்கள் ‘வழிமேல் விழி வைத்து காத்து இருப்பது போல’ உள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement