மீரா மிதுனின் உண்மை முகம் தெரிந்தால் சாக்ஷி, அபிராமி செய்தது சரிதான்னு நீங்களே சொல்வீங்க.!

0
10367
Meera-Mithun

காதலும் கலகலப்புமாக இருந்த பிக் பாஸ் வீடு இன்று மனக்கசப்பும் சலசலப்புமாக மாறியுள்ளது. அதற்கு முக்கிய காரணமே நேற்றய நிகழ்ச்சியில் புதிய போட்டியாளராக களமிறங்கிய மீரா மிதுன் தான். அவர் உள்ளே நுழைந்ததும் சாக்ஷி மற்றும் அபிராமி முகத்தில் அப்படி ஒரு வெறுப்பே தெரிந்தது.

யார் இந்த மீரா மிதுன்? எதற்காக சாக்ஷிக்கும், அபிராமிக்கும் இவர் மீது இப்படி ஒரு வன்மம் என்பதை ஆராய முற்பட்டபோது மீரா மிதுன் பற்றிய பல திடுக்கிடும் தகவல்கள் நமக்கு கிடைக்கபெற்றது. தானா சேர்ந்த கூட்டம் படத்தில் துணை நடிகையாக நடித்தவர் நடிகையும் மாடல் அழகியுமான மீரா மீதும். அந்த படத்தில் கலையரசுனுக்கு மனைவியாக நடித்திருந்தார். அதற்கு முன்பே ‘8 தோட்டாக்கள்’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்த இவர், இந்த படத்தின் மூலம் இன்னும் அதிகம் கவனிக்கப்பட்டார்.

பெங்களூருவை சேர்ந்த தமிழ்செல்வி என்ற மீரா மிதுன், மிஸ் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு, மிஸ் கியூன் ஆப் சவுத் இந்தியா ஆகிய பட்டங்களை வென்றுள்ளார். இந்த நிலையில், சென்னை வடபழனியில் தமிழக பெண்கள் பங்குபெறும் மிஸ் தமிழ்நாடு திவா என்ற அழகி போட்டி ஒன்றை நடத்த உள்ளதாக இருந்தார்.  

ஆனால், அதனை தடுக்கும் விதமாக, போலீசார் உள்பட பலர் தனக்கு மிரட்டல் விடுத்துவருவதாகவும்,  தனது அந்தரங்க புகைபடங்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டுவதாகவும் மீரா மிதுன் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால், மீரா மிதுன் கூறும் அனைத்தும் பொய் என்றும் அவர் அழகி என்ற பெயரில் பலரிடம் பண மோசடி செய்துள்ளதாகவும் பிரபல ஈவென்ட் ஆர்கனைசஸர் ஜோ மைக்கல் என்பவர் தெரிவித்திருந்தார்.

ஜோ மைக்கேல் :

இது ஒரு புறம் இருக்க தாங்கள் வழங்கிய பட்டத்தை வைத்துக்கொண்டு மோசடி வேலைகளில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மிஸ் தென் இந்தியா அமைப்புகூறியது. தாங்கள் கொடுத்த பட்டத்தை மீரா மிதுனால் வேறு எங்கும் பயன்படுத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி பல மோசடிகளில் ஈடுபட்டுள்ள மீரா மிதுனை மாடல் அழகிகளான சாக்ஷிகும், அபிராமிக்கு தெரிந்திருக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே, தான் மீரா மிதுனை அவர்கள் நேற்று அவ்வாறு ட்ரீட் செய்திருக்கலாம். எது எப்படியோ மீரா மிதுனின் சுயரூபம் என்னவென்று போக போக நமக்கே தெரியும்.