ரஜினி, அஜித்துடன் நடித்த நடிகை.! தற்போது பிக் பாஸ்ஸின் அடுத்த போட்டியாளர்.!

0
1640
Bigg-Boss-3
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்களை பற்றிய விவகிரங்கள் வெளியாகி கொண்டு இருக்கின்ன. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் அடுத்த போட்டியாளராக நடிகை சாக்ஷி அகர்வால் கலந்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ‘காலா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தவர் நடிகை சாக்ஷி அகர்வால்.  

- Advertisement -

வட மாநிலத்தைச் சேர்ந்த இவர், 1985 ஆம் ஆண்டு 20 ஆம் தேதி உத்ரகாண்டில் பிறந்தார். பின்னர் சென்னையில் வளர்ந்து வந்தார். கல்லூரி படிக்கும் காலத்திலேயே மாடலிங் துறையில் ஈடுபட்ட வந்தார். வந்தார். இதுவரை 100க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ளார். பின்னர் 2018 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஓராயிரம் கேணல் என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

Sakshi-Agarwal

அதன் பின்னர் காலா படத்தில் ரஜினியின் மருமகன் அம்மாவாக நடித்திருந்தார். மேலும் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்திலும் மருத்துவராக நடித்திருப்பார்.தற்போது சின்ரெல்லா, ஆத்யன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். 

-விளம்பரம்-

சாக்ஷி அகர்வாலுக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் வெகு விமர்சியாக சென்னையில் தான் நடைபெற்றது. பின்னர் சில பல காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டனர். ஆனால், இது குறித்து பேசிய சாக்ஷி தனக்கு திருமணமே ஆகவில்லை என்று கூறியிருந்தார்.

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் கவர்ச்சிக்கென்று ஒரு சிலர் கண்டிப்பாக இருப்பார்கள். முதல் சீசனில் ஓவியா, ரைசா. இரண்டாவது சீசனில் யாஷிகா, ஐஸ்வர்யா ஆகியோர். அந்த வகையில் சாக்ஷி அகர்வாலும் படு கவர்ச்சியான பேர் வழிதான் என்பது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை நீங்கள் கண்டால் தெரியும்.

Advertisement