பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த ரஜினிகாந்தின் புகைப்படம் நீக்கப்பட்டது.! ரசிகர்கள் அதிருப்தி.!

0
616
Bigg-Boss-3
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சி கோலாகலமாக துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்களின் விவரம் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இம்முறை பிக் பாஸ் வீட்டினுள் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர்.

-விளம்பரம்-
View image on Twitter

தனது தந்தை வீட்டில் இருந்து பிக் பாஸ் செட்டிற்கு கிளம்பிய கமல் பின்னர் பிக் பாஸ் வீட்டினுள் நுழைந்து அங்கே உள்ள அணைத்து மாற்றங்களை பற்றி விவரித்து கொண்டிருந்தார். இம்முறை நீச்சல் தொட்டியில் தண்ணீர் கிடையாது. சமயலறையில் அளவான எரிவாயு மட்டுமே அளிக்கபடும்.

- Advertisement -

அதே போல கடந்த இரண்டு சீசன்களாக இருந்த பிக் பாஸ் வீட்டிற்கும் தற்போதுள்ள பிக் பாஸ் வீட்டிற்கும் பல மாற்றங்கள் இருக்கின்றன. அந்த வகையில் பிக் பாஸ் வீடு முழக்க ஆர்ட் கெளரி போல பல்வேறு புகைப்படங்கள் வரையப்பட்டுள்ளது.

அதில் விருமாண்டி கெட்டப்பில் இருக்கும் கமல், பாரத நாட்டிய போஸில் இருக்கும் பெண் என்று பல ஓவியங்களும் வரையபட்டுள்ளது. அதே போல கமலின் புகைப்படத்திற்கு நேர் எதிரில் ரஜினியின் பேட்ட படத்தின் ஒரு புகைப்படமும் இருந்தது என்று பிக் பாஸ் வீட்டிற்கும் சென்ற சில தொகுப்பாளர்கள் தெரிவித்திருந்தனர்.

-விளம்பரம்-
Image result for bigg boss tamil 3

ஆனால், நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரஜினியின் புகைப்படம் இருந்த இடத்தில் வேறு ஒரு புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பாக பிக் பாஸ் வீட்டிற்குள் விசிட் அடித்த பரத் என்ற தொகுப்பாளர் ஒரு அதிர்ச்சியான ட்வீட் செய்திருந்தார்.

அதில், கடந்த வாரம் நான் பிக் பாஸ் வீட்டில் ஒரு நாள் முழுக்க இருந்தேன். ஆனால், ரஜினிகாந்த்தின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளதை கண்டு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது’ என்று பதிவிட்டதோடு விஜய் தொலைக்காட்சியையும் டேக் செய்துள்ளார். இதனால் ரஜினிகாந்தின் ரசிகர்கள் கடும் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.

Advertisement