இந்தியன் 2 வில் இணைத்த பிக் பாஸ் 3 பிரபலம். வெளியான புகைப்படம் இதோ.

0
7712
Indian-2
- Advertisement -

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் உலக நாயகன் கமல்ஹாசன். தற்போது கமல்ஹாசன் அவர்கள் நடிப்பில் “இந்தியன் 2” படத்திற்கான படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று கொண்டுகிறது. தமிழ் சினிமா திரை உலகில் இயக்குனர் சங்கர் படம் என்றாலே பிரம்மாண்டம் என்பது அனைவருக்கும் தெரியும். மேலும்,1996ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த படம் தான் இந்தியன். இந்தியன் படம் ‘ தலைவிரித்து ஆடும் ஊழலை ஒழிக்கும் குறிக்கோளோடு’ எடுக்கப்பட்ட கதையாகும். தற்போது 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர்- கமலஹாசன் கூட்டணியில் “இந்தியன் 2” படம் உருவாகி வருகிறது. மேலும்,இந்த “இந்தியன் 2” படம் குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

இந்தியன் முதல் பாகத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்தியன் படத்தை ஏ. எம். ரத்னம் தயாரிப்பில் உருவாக்கி சூர்யா மூவிஸ் வெளியிட்டார்கள். அதுமட்டும் இல்லாமல் இயக்குனர் ஷங்கர் படம் என்றால் சொல்லவேண்டுமா! பிரம்மாண்டமான செலவில் ரசிகர்களை தெறிக்கவிடும் அளவிற்கு இருக்கும். மேலும், இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். சமீபத்தில் தான் இந்தியன் 2 படத்திற்கான பூஜைகள் முடிவடைந்தது. மேலும், இந்த படத்திற்கான முதல்கட்ட படப்பிடிப்புகள் பிரம்மாண்டமான அளவில் போடப்பட்டு வருகின்றன.

இதையும் பாருங்க : உடல் பாகங்கள் தெரியும்படி கடற்கரையில் ஊஞ்சல் ஆடிய அமலா பால். அடங்கமாட்டாங்க போல.

- Advertisement -

தற்போது இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் போபாலில் நடந்து கொண்டிருக்கிறது. மேலும், இந்த படத்தில் காட்டப்படும் சண்டை காட்சி ஒன்றுக்கு மட்டும் 40 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், கமல்ஹாசன் அவர்கள் ‘இந்தியன் தாத்தா’ கெட்டப்பில் நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்நிலையில் தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சமீபத்தில் தான் வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மத்த ரெண்டு சீசன்களை விட பட்டையைக் கிளப்பியது கூட சொல்லலாம். மேலும், இந்த சீசன் காதல், கலவரங்கள், சண்டைகளுக்கு பஞ்சமே இல்ல. அந்த அளவிற்கு வேற லெவல்ல போயிருந்தது.

-விளம்பரம்-

தமிழில் பிக்பாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் எப்பவுமே நம்ம உலக நாயகன் கமலஹாசன் தான். அதோடு கமலஹாசன் அவர்கள் வார இறுதியில் வந்து வீட்டுக்குள் நடக்கும் சண்டைகளை தீர்த்து வைப்பார். மேலும்,இந்த வருடம் நடந்த பிக்பாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சி உலக அளவில் ரசிகர்களிடையே பாராட்டும், வாழ்த்துக்களும் பெற்று வந்தன. மேலும், இந்த பிக் பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னர் முகென். இரண்டாவது இடத்தை சாண்டியும், மூன்றாம் இடத்தை லாஸ்லியாவும் பெற்றார்கள். மேலும்,பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கமலஹாசனின் ஸ்டைலிஷ் அண்ட் லுக்குக்கு காரணமானவர் அம்ரிதா ராம். இவர் ஏற்கனவே கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த விஸ்வரூபம்-2 படத்தின் ஸ்டைலிஷ் பணியில் வேலை செய்திருக்கிறார். மீண்டும் இவர் ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் ஸ்டைலிஷ் ஆக பணிபுரிந்து வருகிறார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. மேலும், இந்தியன் 2 படத்தில் கமலஹாசன் அவர்கள் 90 வயது உடைய முதியவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதோடு அவருடைய வயதிற்கேற்ற முகபாவம், துணி அலங்காரமும் செய்து வருகிறார் அம்ரிதா ராம்.

Advertisement