முதல் நாளே மலர்ந்த காதல்.! கவின் மீது காதலில் விழுந்தார் அபிராமி.!

0
1733
Abirami-Kavin

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் சர்ச்சைக்கும், சண்டைக்கும் பஞ்சமே இருந்தது இல்லை. அதே போல காதல் ஜோடிகளுக்கும் பஞ்சமே இருந்தது இல்லை. முதல் சீசனில் ஓவியா ஆரவ், இரண்டாவது சீசனில் யாஷிகா மஹத், ஐஸ்வர்யா ஷாரிக் இப்படி பலர். அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாவது சீசனில் ஒரு புதிய லவ் ஸ்டோரி ஒன்று லேசாக தீப்பிடிக்க துவங்கியுள்ளது.

நேற்றைய நிகழ்ச்சியில் ஷெரினுடன் கார்டன் ஏரியாவில் பேசிக்கொண்டிருந்தார் அபிராமி, அப்போது கவின் தனக்கு சரவணன் மீனாட்சி சீரியலில் இருந்தே தெரியும், அவரை அந்த சீரியலில் கண்டதும் ‘யார் இந்த பையன் இவ்வளவு அழகா இருக்கான்’ என்று நினைத்தேன். அவரை எனக்கு அப்போதே மிகவும் பிடித்துப்போய் விட்டது. எனக்கு ஒருமுறை கவின் என்ற பெயரில் இருந்து பேஸ்புக்கில் ரேக்வஸ்ட் வந்தது, நானும் ஆச்சர்யபட்டு அதனை அக்சஃப்ட் செய்தேன்.

- Advertisement -

ஆனால், அது போலியான ஐடி என்று பின்னர் தான் எனக்கு தெரிந்தது. பின்னர் நானே கவினின் ஒரிஜினல் ஐடியை கண்டு பிடித்து அவருக்கு ரெக்வஸ்ட் கொடுத்தேன். பின்னர் அவரிடம் பேசும் போது ‘என் பெயரில் பல போலி கணக்குகள் இருக்கிறது’ என்று அவரே சொன்னார். அவர் ரொம்ப டீசண்ட் !

-விளம்பரம்-

அவர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததும் நானே அவரிடம் சென்று பிறந்தநாள் வாழ்த்தை சொன்னேன். அவர் மீது எனக்கு க்ரேஷ் இருக்கிறது. ஆனால், அவரோ என்னை மச்சான் என்று கூப்பிடுகிறார். அப்புறம் தான் நான் யோசிச்ச இந்த முஞ்சிகிட்ட போயடு் நான் எப்படி செல்றது உன் மேல எனக்கு க்ரஷ் இருக்குனு. அப்படி சொன்னா இருக்கிற மரியாதையும் போய்டும். அதனால நான் அமைதியா இருந்திட்டேன். இந்த விஷயம் எல்லாருக்கும் தெரியுது ஆன,இந்த சனியனுக்கு மட்டும் தெரியமாட்டுது என்று சிரித்தபடியே அபிராமி கூற, ஷெரினும் ‘நானும் நோட் செய்தேன் உனக்கு கவின் மேல ஓரு க்ரஷ் இருக்குனு’ கூறினார்.

அதன் பின்னர் மீண்டும் கவினை பற்றி புகழ்ந்த அபிராமி, அவர் மிகவும் குயூட், ஃபன்னி, அந்த பந்தா கூட அவரிடம் இல்லை என்று கூறினார். உடனே இவர்கள் இருவரின் பேச்சில் நுழைந்த சாக்ஷி’என்ன பேசி கொண்டிருக்கீங்க’ என்றதும், கவின் மீது எனக்கு க்ரீஸ் இருக்குனு அபிராமி கூற, ஷாக் ரீயாக்ஷன் கொடுத்த சாக்ஷி ‘சீக்கிரம் பிக் பாஸ் வீட்ல ஒரு லவ் ஸ்டோரி ஸ்டார்ட் ஆக போகுது என்றார். பின்னர் அபிராமியே எனக்கு அவர் மேல லவ் தான் ஆனால், அவன் மொதல்ல ஓகே சொல்னும் இல்ல என்றார். பின்னர் வாரணம் ஆயிரம் சூர்யா ஸ்டைலில் பேசிய அபிராமி ‘ஹாய் கவின், ஐ அம் அபி, நீ அவ்ளோ மொக்க, ஆனால், நீ போட்ற மொக்கஎல்லாம் எனக்கு பிடிச்சிருக்கு, ஐ எம் இன் லவ் வித் யூ’ என்று ரொமான்டிகாக கவினை நினைத்து உருகினார் அபிராமி.

Advertisement