பிக் பாஸ் தமிழ் சீசன் 3.! முதல் போட்டியாளரே இந்த சர்ச்சை நபரா ?

0
1254
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை எண்டிமால் என்ற நிறுவனம் தான் தயாரித்தது. சர்வதேச அளவில் பெரிய தொலைக்காட்சி தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் விளங்கும் நிறுவனம் என்டமோல் ஷைன் . கடந்த 2014ஆம் ஆண்டு என்டமோல் மற்றும் ஷைன் இரண்டும் இணைந்து என்டமோல் ஷைன் என்று அழைக்கப்பட்டது. 

-விளம்பரம்-

இந்த நிறுவனம் கடந்த ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 79 நாடுகளில் இந்த நிறுவனம் 800 தயாரிப்புகளை கொடுத்துள்ளது. விஜய் டிவி உடன் நாங்கள் போட்ட ஒப்பந்தம் கடந்த ஆண்டு நிறைவடைந்து விட்டது தற்போது தமிழில் இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது இன்னும் ஒரு சில மாதத்தில் இதற்கான ஒப்பந்தம் போடப்படும் என்று தெரிவித்துள்ளார். தற்போது மூன்றாவது சீசனில் நடிகை கஸ்தூரி கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

நடிகை கஸ்தூரி கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கபட்டது. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியை விட தனது மகன் தான் முக்கியம் என்று கூறிவிட்டார் கஸ்தூரி. தற்போது மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மும்மரமாக பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

மேலும், கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போட்டியாளர்களால் நிகழ்ச்சியை சுவாரசியமாக எடுத்துச்செள்ள முடியவில்லை. எனவே, தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் கஸ்தூரி போன்ற நடிகைகளை நிகழ்ச்சியில் பங்குபெற வைத்து நிகழ்ச்சியை முதல் சீசனை போலவே ஸ்வாரசியமாக கொண்டு செல்ல நினைக்கிறது எண்டிமால் நிறுவனம்.

-விளம்பரம்-

எனவே, மூன்றாவது சீசனில் கஸ்தூரி கலந்த்துகொள்வாரா இல்லையா என்பது பிக் போஸ் நிகழ்ச்சிதுவங்குவதற்கு பின்னரே உறுதியாக கூறப்படும். அதுவரை எங்களுடன் இணைந்திருங்கள். ஆனால், தற்போது வந்த தகவலின்படி இது ஓரளவிற்கு உண்மை என்று தான் கூறப்படுகிறது.

Advertisement