Bigg Boss Tamil 3 : பிரம்மாண்ட செட்டில் கமல், போட்டியாளர்களின் அறிமுகம்.! வீடியோ இதோ.!

0
1157
Bigg-Boss-3
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று துவங்க இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் இன்று (ஜூன் 23) விஜய் தொலைக்காட்சியில் இன்று இரவு 8 மணிக்கு பிரம்மாண்ட ஆரம்ப விழாவுடன் துவங்க இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த ஆண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான பிரம்மாண்ட செட் சென்னை பூந்தமல்லி சாலையில் அமைந்துள்ள ஈ வி பியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சீசனையும் கடந்த இரண்டு சீசனை போல உலக நாயகன் கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் 9.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

இதையும் பாருங்க : Bigg Boss Tamil 3 : வெளியானது பிக் பாஸ் வீட்டின் புகைப்படங்கள்.! எப்படி இருக்குன்னு பாருங்க.! 

- Advertisement -

சமீபத்தில் இந்த நிகழ்ச்சி தொடர்பான வீடியோ ஒன்றையும் விஜய் டிவி வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் ஒரு வழியாக இந்த நிகழ்ச்சியில் பங்குபெற போகும் போட்டியாளர்களை பற்றிய முழு விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் 8 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் என 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இன்னும் ஒரு சில மணி நேரங்களே இருக்கும் நிலையில் விஜய் டிவி அடுத்தடுத்து ப்ரோமோ விடீயோக்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நடிகர் கமல் பிரம்மாண்ட செட்டில் ரசிகர்களுடன் உரையாடும் வீடியோ ஒன்றும், போட்டியாளர்கள் மேடையில் நடனமாடும் சில விடீயோக்களும்.வெளியாகியுள்ளது

-விளம்பரம்-
Advertisement