பிக் பாஸ் வீட்டினுள் இந்த ஓவியத்தில் இருக்கும் அந்த நடிகையை கவனிச்சீங்களா.!

0
961
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சி கோலாகலமாக துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்களின் விவரம் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இம்முறை பிக் பாஸ் வீட்டினுள் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர்.

-விளம்பரம்-

தனது தந்தை வீட்டில் இருந்து பிக் பாஸ் செட்டிற்கு கிளம்பிய கமல் பின்னர் பிக் பாஸ் வீட்டினுள் நுழைந்து அங்கே உள்ள அணைத்து மாற்றங்களை பற்றி விவரித்து கொண்டிருந்தார். இம்முறை நீச்சல் தொட்டியில் தண்ணீர் கிடையாது. சமயலறையில் அளவான எரிவாயு மட்டுமே அளிக்கபடும்.

இதையும் பாருங்க : பிக் பாஸ் சென்ற சாண்டி.! பல உண்மைகளை ட்விட்டரில் கொட்டிய முன்னால் காதலி காஜல்.! 

- Advertisement -

அதே போல கடந்த இரண்டு சீசன்களாக இருந்த பிக் பாஸ் வீட்டிற்கும் தற்போதுள்ள பிக் பாஸ் வீட்டிற்கும் பல மாற்றங்கள் இருக்கின்றன. அந்த வகையில் பிக் பாஸ் வீடு முழக்க ஆர்ட் கெளரி போல பல்வேறு புகைப்படங்கள் வரையப்பட்டுள்ளது.

அதில் விருமாண்டி கெட்டப்பில் இருக்கும் கமல், பாரத நாட்டிய போஸில் இருக்கும் பெண் என்று பல ஓவியங்களும் வரையபட்டுள்ளது. அந்த வகையில் பிக் பாஸ் வீட்டினுள் வரையபட்டுள்ள அந்த பெண்ணின் உருவம், பிரபல நடிகையான ஷோபனாவின் பபுகைப்படம் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

ஆனால், மற்றொரு தரப்போ அது மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் புகைப்படம் என்றும் கூறி வருகின்றனர். ஆனால், உண்மையில் அது யாருடைய புகைப்படம் என்று இதுவரை உறுதிபடுத்தப்படவில்லை. இந்த நிலையில் அது தன்னுடை ஓவியம் தான் என்று பிரபல நடிகை கஸ்தூரி ட்வீட் செய்துள்ளார்.

பிரபல நடிகையான கஸ்தூரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு இரண்டு சீசன்களாக கலந்து கொள்வார் என்று பேச்சுக்கள் அடிக்கடி அடிபட்டு கொண்டே வந்தது. ஆனால், இந்த சீசனிலும் இவர் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் ஓவியமாக வரையபட்டுள்ள அந்த ஓவியத்தை பதிவிட்டுள்ள கஸ்தூரி ‘ அட, ஓவியமாவே வரைஞ்சுட்டாங்களா? எப்படியோ, “பிக் பாஸ் வீட்டுல கஸ்தூரி” ன்னு வரிஞ்சு வரிஞ்சு எழுதினவங்க வாக்கு பலிச்சிருச்சே. என்று பதிவிட்டுள்ளார் கஸ்தூரி.


Advertisement