விஜய் டிவி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் தான். இன்னும் சில மாதங்களில் ஒளிபரப்பாக போகும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற போகும் போட்டியாளர்கள் யார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
ஹிந்தியில் 12 சீசன் களை கடந்த நிகழ்ச்சியில் தமிழில் இரண்டு சீசன்களை மட்டுமே கடந்துள்ளது. இந்த இரண்டு சீசன்களில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது .இந்த நிலையில் மூன்றாவது சீசனும் விஜய் தொலைக்காட்சியில் தான் ஒளிபரப்பாக இருக்கிறது.
இதையும் படியுங்க : சி எஸ் கே வை கேவலப்படுத்திய விஜய் ரசிகர்.! கொந்தளித்த பிக் பாஸ் விஜயலக்ஷ்மி.!
மேலும், இந்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். மூன்றாவது சீஸனுக்கான புரொமோ ஷூட் இன்று தொடங்கியது. சென்னை பூந்தமல்லி ஈ.வி.பி வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அதே பிரமாண்ட பிக் பாஸ் வீட்டையொட்டிய செட்டில், கமல்ஹாசன் கலந்துகொண்ட காட்சிகள் தற்போது ஷூட் செய்யப்பட்டு வருகின்றன.
இம்முறை கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறைகளும் தொடங்கிவிட்டன. அடுத்த சில நாள்களில் புரொமோ வீடியோ சேனலில் ஒளிபரப்பாகலாமெனத் தெரிகிறது. ஜூன் இரண்டாவது வாரத்தில் ஷோ தொடங்க இருக்கிறது.