பிக் பாஸ் வீட்டில் இருந்த நாளுக்கு ஏற்றார் போல யார் யார் எவ்வளவு சம்பாதித்து உள்ளார்கள் ? முழு அட்டைவனை இதோ.

0
6036
BB
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர். இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

-விளம்பரம்-
BB

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு பிரபலத்திற்கு ஏற்றார்போல சம்பளம் வழங்கப்படும். அந்த வகையில் இம்முறை போட்டியாளராக கலந்து கொண்ட பிரபலங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தில் விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் பிக் பாஸ் 4-ல் கலந்து கொண்டள்ள போட்டியாளர்களுக்கு அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாயும் குறைந்தபட்சமாக ஒரு நாளைக்கு ஒரு பத்தாயிரம் ரூபாயும் போட்டியாளர்கள் பெற்றுள்ளனர்.

- Advertisement -

ஆண் போட்டியாளர்களின் ஒரு நாளைக்கு அதிகபட்ச சம்பளமாக ஆரி 85,000 ரூபாய்யை பெற்றுள்ளார். அவரை தொடர்ந்து  ரமேஷின் சம்பளம் ரூ.60,000. பாடகர் வேல்முருகனுக்கு ரூ.50,000. ரியோவுக்கு ஒருநாளுக்கு ரூ.35,000. ஆஜித்துக்கு ரூ.15,000. பாலா, சுரேஷ் சக்கரவர்த்தி, சோம் மூவருக்கும் நாளொன்றுக்கு ரூ.10,000 வழங்கப்பட்டு இருக்கிறது. அதே போல பெண் போட்டியாளர்களில் அதிகபட்சமாக ரேகா மற்றும் சனம் ஷெட்டி ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளம் பெற்றுள்ளனர். இவர்களை தொடர்ந்து சுசித்ரா 80,000 ரூபாய் அதிகப்படியான சம்பளம் வாங்கினார். ஆனால், அவர் ஒரே வாரத்தில் வெளியேறிவிட்டார் சுசித்ராவை தொடர்ந்து ரம்யா பாண்டியன் மற்றும் அர்ச்சனா 75,000 கேப்ரில்லா 70,000 ஷிவானி 60,000 அனிதா, நிஷா, சம்யுக்தா ஆகியோர் 40,000 சம்பளமாக பெற்றுள்ளனர்.

யார் யார் எத்தனை நாட்கள் இருந்தார்களோ அந்த நாட்களை கணக்கு செய்து வரி பிடித்தம் போக மீதி கையில் கிடைக்கும். இதில்  நிகழ்ச்சியை ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்கள் விரும்பி வழங்கும் பரிசுப் பொருட்களும் தனி என்கிறார்கள். அந்த வகையில் இந்த சீசனில் அதிகபட்சமாக ஆரி பரிசுபபணம் மற்றும் 105 நாள் சம்பளம் சேர்த்து (வரி சேர்க்காமல்) 1,39,25,000 ரூபாயையும் குறைந்தபட்சமாக சுரேஷ் சக்கரவர்த்தி 3,50,000 ரூபாயையும் இந்த சீசன் மூலம் சம்பாதித்து உள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement