பிக் பாஸ், பாண்டியன் ஸ்டோர்ஸ் இருந்தும் என்ன பயன்- ஒரே ஒரு சீரியலில் Trp கிங்காக விளங்கும் சன் டிவி.

0
3273
- Advertisement -

தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்துமே TRP மதிப்பீடு என்ற ஒரு விடயத்தை வைத்து தான் தங்களின் தொலைக்காட்சி தரத்தை முடிவு செய்து வருகிறது.அந்த வகையில் பல்வேறு தொலைக்காட்சிகளும் தங்களுடைய TRP தரத்தை நிலைநாட்டிக்கொள்ள பல்வேறு வித்யாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ்,கலர்ஸ் என்று பல்வேறு தொலைக்காட்சியின் அச்சாரமாக விளங்கி வருவது சீரியல்கல் மட்டும் தான். அதில் ஒரு சில தொலைக்காட்சியில் வரும் ஒரு சில நிகழ்ச்சிகள், டிவியின் TRP அளவை எகிற வைக்கிறது.

-விளம்பரம்-

அதே போல barcindia என்ற வலைதளத்தில் வாரம் தோறும் இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகி வரும் டிவி நிகழ்ச்சிகளில் TRP ரேட்டிங் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர் . அந்த வகையில் கடந்த நவம்பர் 21 முதல் 27 வரையிலான தேதிகளில் Trp ரேட்டிங்கில் முதல் 5 இடத்தை பிடித்த தமிழ் தொலைக்காட்சி பட்டியலில் பிக் பாஸ் நிகழ்ச்சி இடம்பெறவில்லை. இதில் முதல் இடத்தில் சன் டிவி ரோஜா சீரியல் இடம்பெற்றுள்ளது. அதே போல டாப் 5 சேனலில் சன் டிவி தான் அதிக TRP புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் உள்ளது.

- Advertisement -

கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை விட இந்த சீசன் கொஞ்சம் போராக தான் சென்று கொண்டு இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்த சீஸனில் ஒரு சில போட்டியாளர்களை தவிற மற்ற போட்டியாளர்கள் எதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தார்கள் என்பதே தெரியவில்லை. அவ்வளவு ஏன் நேற்றய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூடஇந்த 60 நாட்களில் இந்த பிக் பாஸ் வீட்டில் உங்களின் பங்களிப்பு என்ன என்று பிக் பாஸ் கேட்டதற்கு பதில் தெரியாமல் அனைவருமே முழித்தனர்.

சரி, பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இப்படி ஏமாற்றியது என்று பார்த்தால், விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களான பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா போன்ற சீரியல்கள் கூட விஜய் டிவிக்கு trp யில் முதல் இடத்தை வாங்கி கொடுக்க முடியவில்லை. கடந்த வாரம் கணக்கிடப்பட்ட டாப் 5 ஸ் டிவி நிகழ்ச்சிகளில் மூன்று இடத்தை சன் டிவி தான் தக்க வைத்து இருக்கிறது. அதே போல டாப் 5 சேனல்களில் சன் டிவி முதல் இடத்திலும் விஜய் டிவி மூன்றாம் இடத்திலும் இருக்கின்றனர் .

-விளம்பரம்-
Advertisement