நாளை பிக் பாஸ் துவங்க இருக்கும் நிலையில் நான் பிக் பாஸ் கலந்துகொள்ளவில்லை என்று அறிவித்த இளம் நடிகை.

0
866
biggboss
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மாபெரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் நாளை (செப்டம்பர் 6) மாலை 6 மணிக்கு கோலாகளமாக துவங்க இருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழை போலவே ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

இந்த சமயத்தில் அனைத்து மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டு இருந்திருக்கும்.ஆனால், தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்படாமல் இருந்தது. தமிழை போலவே தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியும் இதுவரை 3 சீசன்களை கடந்து உள்ளது. தெலுங்கில் பிக் பாஸ் 4 நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 6-ம் தேதி மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்கியது.

- Advertisement -

தமிழில் இன்று போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் இன்று துவங்க இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்று நடிகை காயத்ரி அறிவித்துள்ளார். இதுகுறித்து கூறியுள்ள அவர், உண்மையில் சொல்லும் நேரம் வந்து விட்டது. நான் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லவில்லை .உங்களைப் போலவே நானும் வீட்டில் அமர்ந்து பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டு இந்த நிகழ்ச்சியை பார்ப்பேன் என்று கூறியிருக்கிறார்.

gayathri

தமிழில் 18 வயசு படத்தின் மூலம் அறிமுகமான நடிகை காயத்ரி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதன் பின்னர் விஜய் சேதுபதியுடன் 5 படங்களில் நடித்து விட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் நடிகை கயாத்ரி, பிக் பாஸில் கலந்துகொள்ள போவதாக செய்திகள் வைரலானதை தொடர்ந்து அதனை தெளிவுபடுத்தி இருக்கிறார்

-விளம்பரம்-
Advertisement