ஆரம்பமானது பிக் பாஸ் கவுன்டவுன் – போட்டியாளர்களுக்கு புத்தான்டு சர்ப்ரைஸ் என்ன தெரியுமா ?

0
34214
biggboss
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் விரைவில் துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தெலுங்கில் ஏற்கனவே ப்ரோமோ வெளியான நிலையில் தமிழிலும் விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோக கடந்த சில தினங்களாக இவர்கள் கலந்து கொள்வார்களா அவர்கள் கலந்து கொள்வார்களா என்று பிக்பாஸில் கலந்துகொள்ளப் போவதாக இருக்கும் சில பிரபலங்களின் பெயர்களும் இணையத்தில் கசியத் தொடங்கிவிட்டது.

-விளம்பரம்-
Bigg-boss

கொரோனா பிரச்சனை காரணமாக அணைத்து சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்ட நிலையில் 20 நபர்களை வைத்து ஷூட்டிங்கைத் தொடங்கலாமென அரசு அறிவித்திருந்தது. அந்த எண்ணிக்கை போதாது எனத்  சீரியல் தயாரிப்பாளர்களான நடிகைகள் ராதிகா, குஷ்பு உள்ளிட்டோர் அரசுக்குக் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து தற்போது 60 பேர் வரை கலந்துகொள்ள அனுமதி கிடைத்தது. இதை தொடர்ந்து சின்னத்திரை படப்பிடிப்புகள் துவங்கப்பட்டது.

- Advertisement -

வழக்கமாக ஜூன் மாதம் வந்தால் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கி விடும். ஆனால், இதுவரை பிக் பாஸ் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் தேர்வு கூட இன்னும் நடக்கவில்லை. இதுகுறித்து எண்டிமால் சார்பாக தெரிவித்த போது`கோவிட்’ லாக் டௌன் ஆகஸ்ட்டுக்குள் முடிவுக்கு வந்துவிடும் நம்புவதால் செப்டம்பரில் ஒளிபரப்பைத் தொடங்கலாம் என்று திட்டமிட்டுள்ளோம். விரைவில் அதிகாரபூர்வ தகவல்கள் வரும். நிச்சயம் கமல் சார் தான் தொகுப்பாளராக இருப்பார் என்று தெரிவித்துள்ளனர்.

Image

மேலும், நிகழ்ச்சி தொடர்புடைய சிலர் கூறும் போது அரசு கடைப்பிடிக்கச் சொல்கிற ஷூட்டிங் விதிமுறைகளைக் கடைப்பிடிச்சுத்தான் ஷூட்டிங் நடக்கும். போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் வரப்போகிறவர்களுக்கு முதல் கண்டிஷனே கோவிட் `டெஸ்ட்எடுக்க வேண்டும் என்பது தான் என்று தெரிவித்துள்ளதாக பிரபல பத்திரிகையில் செய்தியும் வெளியிட்டுள்ளனர். மேலும், எப்படியும் 2021 புத்தாண்டை பிக் பாஸ் வீட்டுக்குள்தான் கொண்டாட இருக்கிறார்கள் போட்டியாளகள். அந்தக் கொண்டாட்டத்தில் பெரிய செலிபிரிட்டி ஒருவரை பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ் தர யோசனையும் இருப்பதாகத் 

-விளம்பரம்-
Advertisement