போட்டியாளரிடம் வம்படியாக சென்று சன் டிவி பற்றி பேசிய அனிதா சம்பத். இத கவனிசீனங்களா ?

0
2159
anitha
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் நேற்று (ஆக்டொபர் 4) கோலாகலமாக துவங்கியது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ரசிகர்களுக்கு பரிட்சயம் இல்லாத சில போட்டியாளர்களும் கலந்து கொண்டு இருக்கின்றனர். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள் அதில் இளசுகளுக்கு மிகவும் பரிட்சயமான முகங்களில் அனிதா சம்பத்தும் ஒருவர்.

சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் இவருக்கு கிடைத்த பிரபலத்தை வைத்து இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்து. விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அனிதா சம்பத்.அதன் பின்னர் ஒரு சில படங்களில் செய்தி வாசிப்பாளராக நடித்திருந்தார். மேலும் சூர்யா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான காப்பான், சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படத்திலும் நடித்திருந்தார் அனிதா சம்பத்.

- Advertisement -

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் இவர் திருமணம் கூட செய்து இருந்தார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து டிவி நிகழ்ச்சியில் பணியாற்றி வரும் இவர் தற்போது பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக அடியெடுத்து வைத்துள்ளார். இவருக்கு இளசுகளின் ஆதரவு கண்டிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் நேற்று இவர் ஜித்தன் ரமேஷிடம் சன் டிவி பற்றி பேசி இருந்தார்.

நடிகரும் பிரபல நடிகர் ஜீவாவின் சகோதரரான ஜித்தன் ரமேஷ் கூட பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு இருக்கிறார். நேற்று பிக் பாஸ் வீட்டிற்கு இவர் சென்ற போது அனைவரிடமும் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். அப்போது அனிதா சம்பத் தானாக சென்று ‘நாம் ஏர்கானவே சந்தித்து இருக்கிறோம். நான் உங்களை சன் டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் பேட்டி எடுத்திருக்கிறேன் ‘ கூறியிருந்தார்.

-விளம்பரம்-
Advertisement