அட, பிக் பாஸ் போட்டியாளர்கள் எல்லாம் ஒரே ஹோட்டலில் தான் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்களா ? இந்த புகைப்படங்களை பாருங்க.

0
848
biggboss

இந்நேரத்திற்கு பிக் பாஸ் ஒரு பாதி நாட்களை கடந்த்து இருக்கும். ஆனால், கொரோனா பிரச்சனை காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி தள்ளிக்கொண்டு வந்தது. இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி நடக்குமா இல்லையா என்ற மிகப்பெரிய சந்தேகம் எழுந்த நிலையில் தெலுங்கில் பிக் பாஸ் 4 நிகழ்ச்சி கடந்த 6 ஆம் தேதி துவங்கப்பட்டது. இதையடுத்து தமிழிலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான அறிவிப்பு வெளியானது. இதுவரை இரண்டு ப்ரோமோவும் வெளியானது.

இந்த வாரம் மூன்றாவது ப்ரோமோவும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த சீசனில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்களின் பெயர்கள் அடிக்கடி சமூக வலைதளத்தில் உலா வருகிறது. சமீபத்தில் கூட ஷிவானி பிக் பாஸில் கலந்து கொள்வது உறுதி என்று தகவல் வெளியான நிலையில் ரியோ ராஜ், கிரண், ரம்யா பாண்டியன், வேல் முருகன் அர்ச்சனா போன்ற பலர் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியானது.

- Advertisement -

மேலும் தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர்கள் அனைவரும் தற்போது ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவலும் வெளியானது. அந்த வகையில் நடிகர் ரியோ ராஜ், ஷிவானி. ரம்யா பாண்டியன் போன்றவர்கள் பதிவிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்களில் ஒரே மாதிரியான அறையில் எடுக்கப்பட்டது போல உள்ளதால். இவர்கள் அனைவரும் ஒரே ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே பிக் பாஸ் போட்டிக்காக தேர்வு செய்யப்பட்ட இரண்டு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. மேலும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள போட்டியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டால் அவர்கள் பிக் பாஸில் பங்குபெற முடியாது. எனவே, எப்போது வேண்டுமானாலும் போட்டியாளர்களின் பெயர்கள் மாற்றப்படலாம்.

-விளம்பரம்-

Advertisement