பிக் பாஸ்ஸில் ரம்யா கன்பார்ம் – உறுதி செய்த விஜய் டிவியின் இந்த ப்ரோமா.

0
44416
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் விரைவில் துவங்க இருக்கிறது இதுவரை இரண்டு புறமும் வெளியான நிலையில் அடுத்த மாதம் நான்காம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறதுஏற்கனவே இந்த சீசனில் கலந்துகொள்ள போகும் போட்டியாளர்களின் லிஸ்ட் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இப்படி ஒரு நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் பிக் பாசில் கலந்துகொள்ளவது உறுதி என்று சில செய்திகள் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

சமூக வலைத்தளங்களில் பல்வேறு நபர்கள் திடீரென்று பிரபலமடைந்து விடுகிறார்கள். அந்த வகையில் ஒரே ஒரு போட்டோ ஷூட் மூலம் சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங்கில் வந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு ராஜ முருகன் இயக்கத்தில் வெளியான ‘ஜோக்கர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும், இந்த திரைப்படம் பல்வேறு விருதுகளையும் குவித்தது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிங்கர்களுக்கு பரிட்சியமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.

- Advertisement -

ஆனால், இவர் நடத்திய போட்டோ ஷூட் மூலம் தான் பிரபலமடைந்தார். மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்ற ரம்யா பாண்டியன் தற்போது கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் கூட நடுவராக பங்குபெற்று வந்தார். ஆனால், சமீபத்தில் வெளியான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் ப்ரோமோவில் ரம்யா பாண்டியன் இல்லை.

இதனால் நடிகை ரம்யா பாண்டியன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்காக மற்ற போட்டியாளர்களை போல ரம்யா பாண்டியனும் தனிமைபடுத்தப்பட்டுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே போல போட்டியாளர்கள் அனைவரும் ஒரே ஹோட்டலில் தான் தனிமைபடுத்தப்பட்டுள்ளார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதனை உறுதி செய்யும் விதமாக சில புகைபடங்களும் வெளியானது.

-விளம்பரம்-
Advertisement