பிக் பாஸ்னா ஒரு சிங்கர் இருக்கனும் இல்ல – இந்த சீசன்ல இளம் சூப்பர் சிங்கர் போட்டியாளர். யார் தெரியுமா ?

0
1315
biggboss

இந்நேரத்திற்கு பிக் பாஸ் ஒரு பாதி நாட்களை கடந்த்து இருக்கும். ஆனால், கொரோனா பிரச்சனை காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி தள்ளிக்கொண்டு வந்தது. இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி நடக்குமா இல்லையா என்ற மிகப்பெரிய சந்தேகம் எழுந்த நிலையில் தெலுங்கில் பிக் பாஸ் 4 நிகழ்ச்சி கடந்த 6 ஆம் தேதி துவங்கப்பட்டது. இதையடுத்து தமிழிலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான அறிவிப்பு வெளியானது. இதுவரை இரண்டு ப்ரோமோவும் வெளியானது.

இந்த வாரம் மூன்றாவது ப்ரோமோவும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த சீசனில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்களின் பெயர்கள் அடிக்கடி சமூக வலைதளத்தில் உலா வருகிறது. சமீபத்தில் கூட ஷிவானி பிக் பாஸில் கலந்து கொள்வது உறுதி என்று தகவல் வெளியான நிலையில் தற்போது சூப்பர் சிங்கரில் பங்குபெற்ற ஆஜீத் காலிக் இந்த சீசனில் கலந்துகொள்ள போகிறார் என்ற நம்பராமான தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் 3 -யில் கலந்து கொண்டு பட்டத்தை வென்றவர் ஆஜீத் காலிக். இந்த சீசனில் இவர் பாடிய ரோஜா ரோஜா, போ நீ போ, உயிரே உயிரே போன்ற பாடல்கள் ரசிகர்களை கொள்ளை கொண்டது. மேலும், இந்த சீசனில் ஆஜீத் காலிக்கு Most Stylish Singer என்ற விருது கூட வழங்கப்பட்டது.

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சிங்கர் யாராவது பங்குபெற்று விடுவார்கள். அனந்த் வைத்தியநாதன், NSK ரம்யா, முகென் இப்படி பிக் பாஸில் பல பாடகர்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் இந்த சீசனிலும் அதே பார்முலாவை பயன்படுத்தியுள்ளது பிக் பாஸ் குழு. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் ஆஜீத் திருச்சியை சேர்ந்தவர். போன சீசனில் கலந்து கொண்ட கவினும் திருச்சியை சேர்ந்தவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement