பிக் பாஸ் 4 துவங்கும் தேதியை அறிவித்த விஜய் டிவி – எப்போது தெரியமா ?

0
699
biggboss

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மாபெரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் துவங்கும் தேதியின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழை போலவே ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சமயத்தில் அனைத்து மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டு இருந்திருக்கும்.

ஆனால், தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்படாமல் இருக்கிறது. அவ்வளவு ஏன் இதுவரை போட்டியாளர்கள் பற்றிய எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. தமிழை போலவே தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியும் இதுவரை 3 சீசன்களை கடந்து உள்ளது. தெலுங்கில் பிக் பாஸ் 4 நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 6-ம் தேதி மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்கியது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் விஜய் டிவியின் பிரபலங்கள் அனைவரும் சேர்ந்து கொரோனா நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையில் கிருமிநாசினி போட்டுக்கொள்வது முகக் கவசம் அணிவது என்று அந்த வீடியோ அமைந்திருந்தது. மேலும் இந்த வீடியோவின் இறுதியில் வழக்கம்போல பிக் பாஸ் துவங்கும் தேதி அறிவிக்கப்படாமல் விரைவில் என்று போட்டு முடிக்கப்பட்டது.

Image

பிக் பாஸ் 4 குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட போவதாக விஜய் டிவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுளள்து. அது கண்டிப்பாக பிக் பாஸ் 4 துவங்கும் தேதியின் அறிவிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எதிர் பார்த்தது போலவே பிக் பாஸ் நிகழ்ச்சி அடுத்த மாதம் 4 ஆம் தேதி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வழக்கமாக 9 மணிக்கு ஒளிபரப்பான பிக் பாஸ் 9.30 க்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement