ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மாபெரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் இன்னும் வாரங்களில் துவங்க இருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழை போலவே ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சமயத்தில் அனைத்து மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டு இருந்திருக்கும்.
ஆனால், தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்படாமல் இருக்கிறது. அவ்வளவு ஏன் இதுவரை போட்டியாளர்கள் பற்றிய எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. தமிழை போலவே தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியும் இதுவரை 3 சீசன்களை கடந்து உள்ளது. தெலுங்கில் பிக் பாஸ் 4 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமை, செப்டம்பர் 6-ம் தேதி மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்கியது. இதனால் தெலுங்கு பிக் பாஸ் ரசிகர்கள் குஷியில் ஆழ்ந்துள்ளனர்.
அதேபோல தமிழில் இதுவரை இரண்டு ப்ரோமோக்கள் வெளியாக இருக்கிறது. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பற்றிய எந்த ஒரு தகவலும் வெளியாகாமல் இருந்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த சீசனில் பிகில் பட நடிகை அமிர்தா ஐயர் கலந்துகொள்ளப் போவதாக நம்பகரமான தகவல் வெளியாகி இருக்கிறது.
விஜய்யின் பிகில் படத்தில் தென்றல் கதாபாத்திரத்தில் நடித்த அமிர்தா ஐயர் ஏற்கனவே விஜயின் தெறி படத்தில் நடித்திருக்கிறார். அதேபோல தற்போது பிக் பாஸ் கவின் கதாநாயகனாக நடித்துவரும் லிப்ட் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். எனவே, கவின் ரசிகர்களின் ஆதரவு இவருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமிர்தா ஐயர், ஏற்கனவே சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்த போது ரசிகர் ஒருவர் ”ர் ‘நீங்க பிக் பாஸ் போவீங்களா ‘ என்று கேட்டிருந்தார் அதற்கு பதில் அளித்த அமிர்தா ‘தெரியல சஸ்பென்ஸ்ஸாவே இருக்கட்டும்’ என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.