நான் பிக் பாஸ்ல இருக்கேனா இல்லையானு விரைவில் சொல்ற – ட்விஸ்ட் கொடுத்த நடிகை. யார் தெரியுமா ?

0
5836
gayathri
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மாபெரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் துவங்கும் தேதியின் அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தது . கடந்த மூன்று ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழை போலவே ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

இந்த சமயத்தில் அனைத்து மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டு இருந்திருக்கும்.ஆனால், தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்படாமல் இருக்கிறது. அவ்வளவு ஏன் இதுவரை போட்டியாளர்கள் பற்றிய எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. தமிழை போலவே தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியும் இதுவரை 3 சீசன்களை கடந்து உள்ளது. தெலுங்கில் பிக் பாஸ் 4 நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 6-ம் தேதி மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்கியது.

- Advertisement -

இதுவரை பிக் பாஸ் குறித்து இரண்டு ப்ரோமோ மட்டுமே வெளியாகி இருந்தது. அதையே அவ்வப்போது கட் செய்து புதிய ப்ரோமோ போல வெளியிட்டு வந்த நிலையில் இன்று காலை பிக் பாஸ் குரலில் ஒரு ப்ரோமோ ஒன்றும் வெளியானது. இப்படி ஒரு நிலையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேனே இல்லையா என்பதை விரைவில் அறிவிப்பதாக கூறியுள்ளார் நடிகை காயத்ரி.

தமிழில் 18 வயசு படத்தின் மூலம் அறிமுகமான நடிகை காயத்ரி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதன் பின்னர் விஜய் சேதுபதியுடன் 5 படங்களில் நடித்து விட்டார். இப்படி ஒரு நிலையில் இவர் பிக் பாஸில் கலந்துகொள்ள போவதாக செய்திகள் வைரலானதை தொடர்ந்து அதனை விரைவில் தெளிவுபடுத்த இருக்கிறார் காயத்ரி.

-விளம்பரம்-
Advertisement