பிக் பாஸ் வீட்டில் ஒலித்த வாத்தி கமிங் பாடல் – விஜய் ஸ்டெப்பை போட்ட போட்டியாளர்கள் – வீடியோ இதோ.

0
1372
Vijay

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் ‘தளபதி’ விஜய். ‘சர்கார்’ படத்துக்கு பிறகு ‘தளபதி’ விஜய் டபுள் ஆக்ஷனில் அசத்திய ‘பிகில்’ திரைப்படம் கடந்த 2019-ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளி வந்து மாஸ் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘மாஸ்டர்’. இப்படத்தை இயக்கியவர் இயக்குநர் லோகேஷ் ‘மாநகரம்’ என்ற தன் முதல் படத்திலையே தன்னை தனித்துவமாக அடையாளம் காணும் வகையில் மிக தரமான முத்திரையை பதித்தவர்.

அந்த வெற்றி முத்திரையை தனது அடுத்த படமான ‘கைதி’-யிலும் பதித்து சாதித்து காட்டினார். இந்த இரண்டு சூப்பர் ஹிட் படங்களின் பெயரைச் சொல்லி அவரை குறிப்பிட வருவதற்குள், கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்யுடன் கூட்டணி அமைத்து ‘மாஸ்டர்’ இயக்குநர் ஆனார் லோகேஷ் கனகராஜ். கொரோனா பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது.

- Advertisement -

மேலும் , இந்த திரைப்படம் கண்டிப்பாக திரையரங்குகளில் தான் வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது. இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. அதிலும் இந்த படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த பாடலை பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியில் இந்த பாடல் ஒளிபரப்பப்பட்டு போட்டியாளர்கள் அனைவரும் செம குத்தாட்டம் போட்டு உள்ளனர்.

அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழில் மூன்று ஆண்டுகளாக ஒளிபரபானது போலவே பிக் பாஸ் நிகழ்ச்சி தெலுங்கிலும் இதுவரை மூன்று சீசன்களை நிறைவு செய்து இருக்கிறது. கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி தான் தெலுங்கு பிக் பாஸ்ஸின் 4வது சீசன் துவங்கியது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் நாகார்ஜூனா தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement