அனைவரும் காத்து இருந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நேற்று தான் ப்ரம்மாண்டமாக, கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சி ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், ஐந்து வருடங்களாக இந்த நிகழ்ச்சியை கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கப்பட்டது. கடந்த சீசன்களை விட இந்த முறை பல மாற்றங்களை கொண்டு வந்து இருந்தார்கள். ஆரம்பத்தில் பிக் பாஸ் போட்டியில் 18 பேர் கலந்து இருந்தார்கள்.
கடைசியில் நிகழ்ச்சியில் ராஜு, பவானி, நிரூப், பிரியங்கா, அமீர் ஆகிய 5 பேர் மட்டுமே பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்தார்கள். அதில் நிரூப், அமீர், பவானி ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் விருந்தினராக வந்திருந்தார். அதேபோல் அப்போது கமலஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்தை அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தார்கள்.
வின்னரை அறிவித்த கமல்:
இறுதியாக கமலஹாசன் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த ராஜூ மற்றும் பிரியங்காவை அழைத்து வந்தார். இவர்கள் இருவரில் ராஜு தான் வெற்றி பெற்றார் என்று அறிவித்தார். மேலும், ராஜுவுக்கு 50 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டு இருந்தது. பிரியங்கா டைட்டில் வின்னர் ஆகவில்லை என்றாலும் ரன்னர் அதாவது இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இப்படி நிகழ்ச்சி படு விமர்சையாக நேற்று நடந்தது. மேலும், ராஜூ வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சோசியல் மீடியாவில் பலரும் வாழ்த்துக்களை பதிவிட்டு வந்தார்கள்.
ராஜூவுக்கு வாழ்த்து சொல்லி ட்விட் போட்ட ஆரி:
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி அவர்கள் ராஜூவுக்கு வாழ்த்து சொல்லி ட்விட் ஒன்று போட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, பெரும்பாலான மக்களின் மனங்களையும் வாக்குகளையும் வென்று பிக் பாஸ் 5 மகுடம் சூடிய ஜெயமோகன் சகோதரருக்கும், மக்களிடம் தனக்கென ரசிகர்களை சம்பாதித்து இறுதி வரை சென்ற இறுதிப்போட்டியாளர்களுக்கும், இடைவிடாது கடினமாக போராடிய அனைத்து போட்டியாளர்களுக்கும் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
வைரலாகும் ஆரியின் டீவ்ட்:
இவரின் டீவ்ட் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் லைக் செய்தும், ஷேர் செய்தும் வருகிறார்கள். தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக ஆரி திகழ்ந்து வருகிறார். இவர் 2010 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கரின் தயாரிப்பில் வெளிவந்த ரெட்டைசுழி என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் நெடுஞ்சாலை, மாயா, முப்பரிமாணம், நாகேஷ் திரையரங்கம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
ஆரி நடித்த படங்கள்:
தற்போது ஆரி படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். நடிகர் ஆரி அவர்கள் சினிமா தவிர சென்னை வெள்ளம், ஜல்லிக்கட்டு பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை போன்ற அனைத்து சமுதாய பிரச்சனைக்கும் முன்னின்று குரல் கொடுத்தவர். அதுமட்டும் இல்லாமல் ஆரி கடந்த ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 4 போட்டியில் பங்கேற்று சிறப்பாக விளையாடி டைட்டில் பட்டத்தையும் தட்டிச்சென்றார். அப்போது அவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. இந்த சீசனில் பாலாஜி இரண்டாவது இடத்தை பிடித்து இருந்தார்.