பச்சை தமிழர், விவசாயி,டாக்டர் – இவர பத்தி தெரிஞ்சா அப்புறம் இவர கலாய்க்க மாடீங்க.

0
4091
iykki
- Advertisement -

தமிழக மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நேற்று மாலை பிரம்மாண்டமாக விஜய் டிவியில் தொடங்கியது. இந்தமுறை பிக் பாஸ் வீடு பார்ப்போரை பிரமிக்க வைக்கும் அளவிற்கு பசுமை வண்ணம் கான்செப்டில் உள்ளது. அதேபோல் அனைவரும் எதிர்பார்த்த இருந்த போட்டியாளர்கள் குறித்தும் தெரிய வந்தது. இந்த முறை பிக் பாஸ் சீசன் 5 தாறுமாறாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இந்த முறை நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த பிக் பாஸ் சீசன் 5 யில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தினுசாக இருக்கிறார்கள் என்று ரசிகர்கள் பலர் குழப்பத்தில் உள்ளார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் ஐக்கி பெர்ரி என்னும் தஞ்சாவூர் தமிழச்சி. இவரைப் பற்றி அறிந்திராத பல விஷயங்களை வாங்க பார்க்கலாம். ஃபாரின் ரிட்டன் பொண்ணு மாதிரி இருக்கும் ஐக்கி பெர்ரி நம்ம தஞ்சாவூர் தமிழச்சி. அப்பா, அம்மா இவருக்கு ஐக்கியத்தின் பொருளை உணர்த்தும் வகையில் ஐக்கியா என்று பெயர் வைத்தார்கள். அதை இவர் ஐக்கி பெர்ரி என்று மாற்றிக்கொண்டார். இவர் தஞ்சாவூரைச் சேர்ந்தவர். இவர் விவசாய குடும்பத்து பெண்.

- Advertisement -

இவர் மருத்துவப் படிப்பை முடித்து மருத்துவராக உள்ளார். இருந்தும் இவர் ராப் இசையில் அதிக ஆர்வம் கொண்டதால் தனது உடை, நடை பாவனை எல்லாம் மாற்றி பாரின் ரிட்டன் பெண்ணாகவே மாறி இருக்கிறார்.ராப் இசையில் அதிக ஆர்வம் இருந்ததால் ராப் இசைக் கலைஞராக வேண்டும் என்று இவர் பல முயற்சிகளை செய்து வருகிறார். இவர் ராப் இசைக் கலையில் மட்டுமின்றி படிப்பிலும் கெட்டி தான். காஸ்மெட்டிக்ஸ் சர்ஜரியன் மருத்துவம் படித்துள்ள இவர் பல சினிமா பிரபலங்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்மென்ட்களையும் செய்துள்ளதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் பிரபல பின்னணிப் பாடகியும் பிக்பாஸ்2 போட்டியாளரான ரம்யா என் எஸ் கே இவருக்கு இசைக்குரு என்று கூறியிருந்தார். மேலும்,ஏ.ஆர். ரஹ்மானின் கே.எம். மியூசிக் கன்சர்வேட்டரியில் இணைந்து இவர் பயிற்சி பெற்றுள்ளார். 2016 ஆம் ஆண்டு இவரின் முதல் இசை ஆல்பம் வெளியானது. அதனைத் தொடர்ந்து ஐக்கி ஏகப்பட்ட ராப் இசைப் பாடல்களை வெளியிட்டு உள்ளார். மேலும், இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஐபோன் காதலி எனும் குறும்படத்தில் நடித்து சமூக வலைதளங்களில் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். புரட்சி கருத்துக்களை தன்னுடைய ராப் இசை பாடல் மூலம் வெளிப்படுத்துவதே தன்னுடைய முக்கிய நோக்கம் என்றும் கூறியிருந்தார். அதுமட்டுமில்லாமல் ஐக்கி பெர்ரி சமூக சேவையில் அதிக ஆர்வம் உள்ளவர். கொரோனா காலத்தில் இவர் ஏகப்பட்ட உதவிகளை செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த பிக்பாஸ் சீசன் 5ல் ஐக்கி பெர்ரி எப்படி அசத்துகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

-விளம்பரம்-
Advertisement