பிக் பாஸ் வீட்டில் ஆள் அட்ரஸ் இல்லாமல் இருக்கும் நதியா – அவருக்கு இவ்ளோ பெரிய மகள்களா.

0
10171
nadiya
- Advertisement -

விஜய் டிவியில் அக்டோபர் 3 ஆம் தேதி பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்கியது. கடந்த சீசன்களை விட இந்த முறை நிகழ்ச்சியில் பல்வேறு மாற்றங்களை புகுத்தி பச்சை வண்ணம் போர்த்திய கான் செப்டில் இருக்கின்றது. இந்த முறை 18 போட்டியாளர்கள் நிகழ்ச்சி ஆரம்பத்தில் கலந்து உள்ளார்கள். தற்போது இந்த நிகழ்ச்சி நான்கு நாட்களை கடந்துள்ளது. மேலும், முதல் இரண்டு நாட்கள் சிரிப்பும், பாசமழை பொழிந்து கொண்டிருந்த பிக்பாஸில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக புகைய தொடங்கியுள்ளது.

-விளம்பரம்-
Gallery

இந்நிலையில் 18 போட்டியாளர்களில் ஒருவரான நதியா சாங் பற்றி தெரியாத பல சுவாரசியமான விஷயங்களை இங்கு பார்க்கலாம். நதியா சாங் யூடியூப் மூலம் பிரபலமானவர். இவர் மலேசியாவை சேர்ந்தவர். இவர் பிரபலமான மாடலும் ஆவார். மேலும், இவர் 2015 ஆம் ஆண்டில் எம்ஐஎம் டாப் மாடல் தேடலில் பங்கேற்று ரன்னர் ஆக வந்தார். இதனை தொடர்ந்து இவர் திருமதி மலேசியா உலக 2016 இல் பங்கேற்றார்.

- Advertisement -

இதில் நதியா சாங் இறுதிப்போட்டி வரை தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் யூடியூப் சேனல் ஒன்று நடித்து வருகிறார். இதில் அவர் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல வீடியோக்களை பகிர்ந்துள்ளார். இதனால் நதியாவுக்கு சமூக வலைத்தளங்களில் பெரும் ரசிகர் கூட்டமே உள்ளது. தற்போது நதியா சாங் அவர்கள் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இந்நிலையில் நதியா சாங் புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

Gallery

அதில் அவர் தனது கணவர் மற்றும் 3 மகள்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம். இது தான் நதியா சாங் குடும்ப புகைப்படம் என்று பகிர்ந்துள்ளார்கள். இதை பார்த்து பலரும் நதியா சாங்குக்கு இவ்வளவு பெரிய மகள்கள் உள்ளார்களா! என்று வியப்பில் கேட்டு வருகிறார்கள். மேலும், பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நதியா சாங் எத்தனை நாட்கள் நீடித்து இருக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

-விளம்பரம்-
Advertisement