பிக் பாஸ்க்கு நான் போல, அதுக்கு காரணம் இதான் – நிகழ்ச்சியில் பேசிய ஜி பி (வீடியோ இதோ)

0
8161
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஒன்றே ஒரு தனி ரசிகர் படை உள்ளது. தற்போது பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்குகிறது. மேலும், பிக் பாஸ் சீசன் 5 அக்டோபர் 3ம் தேதி தொடங்கவுள்ளதாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும், பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது என்று சொன்ன அன்றிலிருந்தே சோசியல் மீடியாவில் பிக் பாஸில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்து பல சர்ச்சைகளும் கேள்விகளும் எழுந்தவண்ணம் உள்ளன.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-41.png

தற்போது பிக் பாஸ் சீசன் 5யில் போட்டியாளராக சகிலாவின் மகள் மிளா , விஜய் டிவியில் தொகுப்பாளினி பிரியங்கா, நடிகை பிரியாராமன், டிக் டாக் ஜிபி முத்து, குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் கனி முன்னணி உட்பட சில பேரின் பெயர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது. மேலும், இவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இதையும் பாருங்க : வெறும் துண்டை மட்டும் பயன்படுத்தி தயாரிப்பாளர் தலையில் துண்டு விழாமல் பார்த்துள்ள முண்டாசுபட்டி இயக்குனர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் ஜி பி முத்து ஜி பி முத்து பிக்பாஸ் வீட்டிற்கு செல்வாரா? இல்லையா? என்று பல கேள்விகள் சோசியல் மீடியாவில் எழுந்தவண்ணம் உள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஜி பி முத்து, தனக்கு பிக் பாஸில் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை என்றும் என்னால் செல் போன் இல்லாமல் இருக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

எனக்கு குடும்பம் இருக்கு, பிள்ளைகளை பார்க்காமல் என்னால் இருக்க முடியாது. மேலும், நான் பிக் பாஸ் செட்டிற்கு முன்னாள் போட்டோ எடுதது சும்மா ஒரு போட்டோ போட்டேன், அதை பார்த்து என் ரசிகர்கள் பலரும் பிக் பாஸுக்கு போக வேண்டாம் என்று சொன்னார்கள். அதே போல பிக் பாஸ் போய் என்னால் தாக்குபிடிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 3 ஆம் தேதி மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்க இருக்கிறது. மேலும், இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சி 10 மணிக்கு ஒளிபரப்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த சீசனில் கொரோனா பிரச்சனை காரணமாக வார இறுதியில் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த முறை கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போடப்பட்டவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட இருக்கின்றனர்.

Advertisement