துவங்கியது பிக் பாஸ் 5 குவரன்டைன், சூப்பர் சிங்கரில் இருந்து விலகிய பிரியங்கா, அவருக்கு பதில் வந்த முன்னாள் போட்டியாளர்.

0
10348
priyanka

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் ரியாலிட்டி ஷோக்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. தற்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மக்களும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அதிக எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் சமூக வலைத்தளங்கள் முழுவதும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளப்போகும் நபர்களை குறித்து தான் கருத்துக்கள் போய்க்கொண்டிருக்கின்றன.

This image has an empty alt attribute; its file name is image-58.png

அந்த வகையில் தற்போது விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கு செல்ல இருப்பதாகவும் அதற்கான ஒரு ஆதாரம் வெளிவந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் மிகப்பிரபலமான தொகுப்பாளினிகளில் பிரியங்காவும் ஒருவர். அதிலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி என்றாலே போதும் பிரியங்கா பெயர் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். அந்த அளவுக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக மக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளார் பிரியங்கா.

இதையும் பாருங்க : வடிவேலு ரீ – என்ட்ரி படமாக அமைய இருந்த ‘நாய் சேகர்’ தலைப்பில் சதீஷ் – பங்கமாக கலாய்த்த நடிகர்.

- Advertisement -

இவர் தொடர்ந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் பல சீசன்களை மாகாபா உடன் இணைந்து தொகுத்து வழங்கியிருக்கிறார். மேலும், கடந்த சில நாட்களாகவே பிக் பாஸ் சீசன் 5ல் பிரியங்கா கலந்து கொள்ளப் போகிறார் என்று பல செய்திகள் சோசியல் மீடியாவில் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் பிரியங்கா தொகுத்து வழங்கி சூப்பர் ஹிட்டான ஸ்டார் மியூசிக் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை தற்போது பிரியங்காவிற்கு பதிலாக மாகாபா தொகுத்து வழங்கியுள்ளார்.

அதே போல தற்போது பிக் பாஸ் 5வில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் சென்னையில் உள்ள ITC ஹோட்டலில் தனிமைபடுத்தப்பட துவங்கியுள்ள நிலையில் சூப்பர் சிங்கரில் இருந்து பிரியங்கா வெளியேறி இருக்கிறார் பிரியங்கா, அவருக்கு பதிலாக சூப்பர் சிங்கரின் முன்னாள் போட்டியாளரான ஷிவாங்கி தொகுத்து வழங்க இருக்கிறார்.

-விளம்பரம்-

தனக்கு கொடுக்கப்பட்டுள்ள அறையின் புகைப்படம் ஒன்றை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஷிவாங்கி, நான் விஜய் டிவியில் ஒரு போட்டியாளராக துவங்கிய அதே மாடி, அதே செட், இரண்டு வருடங்கள் கழித்து என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இனி தான் தான் Vj என்பதை உறுதி செய்துள்ளார் ஷிவாங்கி.

Advertisement