அப்போ இவங்க பிக் பாஸ் போறாங்களா – இன்ஸ்டாவில் சூசனின் சுசுக கண்டு கன்பார்ம் செய்யும் ரசிகர்கள்.

0
937
suzane
- Advertisement -

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. கடந்த ஜனவரி மாதம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கூட முடிவடைந்தது. இந்த சீசனில் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்து இருந்தனர். தமிழில் ஒளிபரப்பாவது போல ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என்று பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-
Image

தமிழில் நான்காவது சீசன் கடந்த ஜனவரி மாதம் தான் நிறைவடைந்தது இப்படி ஒரு நிலையில் இந்த ஆண்டு ஐந்தாவது சீசன் துவங்க இருக்கிறது வரும் அக்டோபர் மாதம் பிக் பாஸ் 5 நிகழ்ச்சி துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் ப்ரோமோ கூட வெளியாகி இருந்தது. இந்த சீசனில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் பற்றிய செய்திகள் அடிக்கடி சமூக வலைதளத்தில் வெளியாகி கொண்டு தான் இருக்கிறது.

இதையும் பாருங்க : திருமணத்திற்கு பின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய இரண்டாம் மனைவி – கேக் ஊட்டிய முதல் மனைவியின் மகன்.

- Advertisement -

அந்த வகையில் ஜி பி முத்து மற்றும் ஷகிலாவின் தத்து மகளான மிளா ஆகிய இருவர் மட்டும் தற்போது உறுதியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த சீசனில் கலந்துகொள்ளப் போகும் பல்வேரு பிரபலங்களின் பெயர்களின் உறுதி செய்யப்படாதா நிச்சயமான போட்டியாளராக நடிகை சூசன் பெயரும் அடிபட்டு வருகிறது.

மைனா, ராட்சன் போன்ற பல படங்களில் தனது வில்லத் தனமான நடிப்பை காட்டி மிரட்டிய சூசன், கடந்த சில காலமாக சின்னத்திரை பக்கம் காணவில்லை. சமீபத்தில் சூசன், பிக் பாஸில் கலந்துகொள்ள இருக்கிறார் என்ற மீம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாக, அந்த மீமை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்த பலர் பிக் பாஸில் கலந்துகொள்வதை சுசகாக சூசன் தெரிவித்து இருக்கிறார என்று கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement