பிக்பாஸ் சீசன் 4 மிஸ் ஆகிடுச்சு, சீசன் 5-ல் அஸீம் போகிறாரா ? – விவரம் இதோ.

0
574
azeem
- Advertisement -

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்த பிக் பாஸ் 4 சீசனில் முதல் இடத்தை ஆரியும், இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்தனர். இப்படி ஒரு நிலையில் 5 ஆம் சீசன் வரும் ஜூன் மாதம் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான போட்டியாளர்களுக்கான தேர்வுகளும் நடைபெற்று வருகிற நிலையில் இந்த சீசனில் கலந்துகொள்ளப் போகும் போட்டியாளர்களின் பெயர்களும் அடிபட்டு வருகிறது. அந்த வகையில் விஜய் டிவி சீரியல் நடிகர் அசீம் இந்த சீசனில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

பிக் பாஸ் 4 சீஸனின் மூன்றாவது வைல்டு கார்டு போட்டியாளராக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம், பகல் நிலவு போன்ற சீரியல்களில் சிவாணிக்கு ஜோடியாக நடித்த அஸீம் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்டு போட்டியாளராக நுழைய இருக்கிறார் என்று பல வாரமாக செய்திகள் வெளியாகி கொண்டு தான் இருந்தது . இதனால் அவர் ஹோட்டலில் தனிமைபடுத்தப்பட்டு இருந்தார். ஆனால், அவரது அம்மாவிற்கு உடல் நலம் சரியில்லாமல் போக ஹோட்டலில் இருந்து வெளியேறினார்.

இதையும் பாருங்க : மகளின் முதல் பிறந்தநாளை கோலாகளமாக கொண்டாடிய சஞ்சீவ் – ஆல்யா. வந்த எல்லாருக்கும் ரிட்டர்ன் கிப்ட் (இதுக்கே பல ஆயிரம் ஆயிருக்குமே)

- Advertisement -

இருப்பினும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என்று பெரிதும் நம்பப்பட்ட நிலையில், தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் போகவதில்லை என்று கூறி இருந்தார் அசீம். இது குறித்து தெரிவித்த அவர், ஒருசிலர் அழுத்தம் மற்றும் பிரச்சனை காரணமாக நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை இவ்வளவுதான் என்னால் தற்போதைக்கு சொல்ல முடியும் உங்களை ஏமாற்றி இதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள் உங்களின் அன்பும் ஆதரவுக்கும் நன்றி விரைவில் உங்களை விரைவில் சந்திக்கிறேன் என்று பதிவிட்டு இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் தான் இவர் இன்னும் சில மாதங்களில் தொடங்க இருக்கும் பிக் பாஸ் 5வில் கலந்து போவதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து அவரிடத்தில் கேட்ட போது, மறுபடியும் மொதல்ல இருந்தா என்று மழுப்பலான பதிலை சொல்லியுள்ளார். எனவே இவர் இந்த சீசனில் கலந்துகொள்வாரா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

-விளம்பரம்-
Advertisement