பிக் பாஸ் 6ல் கலந்துகொண்டு இருக்கும் பிரெண்ட்ஸ் பட நடிகை – அதிகாரபூர்வ புகைப்படம் இதோ.

0
337
- Advertisement -

தெலுங்கு பிக் பாஸில் விஜய் பட நடிகை கலந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. இந்தியா முழுவதும் மிக பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ். இதை முதன் முதலாக ஹிந்தியில் தான் ஒளிபரப்பி இருந்தார்கள். அதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், தமிழில் இந்த நிகழ்ச்சியை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறார்கள்.

-விளம்பரம்-

சமீபத்தில் தான் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் ராஜிவ் முதல் இடத்தையும், இரண்டாம் நிகழ்ச்சியில் பிரியங்காவும் பிடித்தார்கள். இதனை தொடர்ந்து தமிழில் புது வித்தியாசமான முயற்சியில் விஜய் டிவி அறிமுகப்படுத்திய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ottயில் ஒளிபரப்பானது. இதை தொடர்ந்து இதே கான்சப்டில் தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வந்தது.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6:

இதில் முதல் பரிசை பாலாஜி முருதாசும் இரண்டாம் இடத்தை நிரூப்பும் பிடித்து இருந்தார்கள். இதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் பிக் பாஸ் 6 நிகழ்ச்சிக்காக ஆவலாக இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி அக்டோபர் இரண்டாம் தேதி தொடங்க உள்ளது என்ற உறுதியான தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை கமலஹாசன் அவர்களே தொகுத்து வழங்குவதாக கூறப்படுகிறது. இதனால் நாளுக்கு நாள் பிக் பாஸ் சீசன் 6ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

தெலுங்கு பிக் பாஸ்:

மேலும், தமிழை போலவே தெலுங்கிலும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் தெலுங்கு பிக் பாஸில் விஜய் பட நடிகை கலந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. அதாவது, விஜயின் பிரெண்ட்ஸ் பட நடிகை அபிநயா ஸ்ரீ தான் தெலுங்கு பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

அபிநயஸ்ரீ குறித்த தகவல்:

80, 90 கால கட்டங்களில் தமிழ் சினிமா உலகில் கவர்ச்சியிலும், குணச்சித்திர வேடத்திலும், படங்களில் கதாநாயகியாகவும், ரசிகர்களின் கனவு கன்னியாகவும் ஒரு கலக்கு கலக்கியவர் நடிகை அனுராதா. இவருடைய மகள் தான் நடிகை அபிநயஸ்ரீ. நடிகை அபிநயஸ்ரீ திரைப்பட நடிகை மட்டும் இல்லாமல் சிறந்த நடன இயக்குனரும் ஆவார். இவர் பெரும்பாலும் தமிழில் பல படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் தான் நடித்து இருக்கிறார்.

தெலுங்கு பிக் பாஸ் 6ல் அபிநயஸ்ரீ:

இருந்தாலும் இவருக்கு சினிமாவில் எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் இவர் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். பின் இவர் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார். தற்போது இவர் தெலுங்கு பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருப்பதால் பலரும் அவருக்கு வாழ்த்து குவித்து வருகிறார்கள். இவர் இறுதி வரை தாக்குபிடிப்பாரா? இல்லை பாதியிலேயே வந்து விடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement