பிக் பாஸ் சீசன் 6ல் பிரபல பாலிமர் நியூஸ் செய்தியாளர் – அவரே சொன்ன வீடியோ இதோ.

0
2011
biggboss6
- Advertisement -

தமிழ் தொலைக்காட்சியில் மிகப் பிரபலமான செய்தி வாசிப்பாளராக திகழ்பவர் ரஞ்சித். இவர் பாலிமர் சேனலில் நியூஸ் ரீடராக இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் இவர் பிரபல பத்திரிகைக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, எத்தனையோ ஜாம்பவான்கள் சேனல்கள் தமிழில் இருக்கு. நான் வேலை செய்கிற பாலிமர் சேனலில் சிறந்த நியூஸ் சேனல் காண விருது கிடைத்ததற்கு முதல் நன்றி. அப்படியே சிறந்த நியூஸ் ரீடர் விருதும் சேர்த்துக் கொண்டால் நன்றாக இருக்கும். நான் 2022ல் பிஏ ஆங்கிலம் முடித்தேன்.

-விளம்பரம்-

எல்லார் மாதிரியும் என்ன பண்ணப் போறேன் என்ற கேள்வி எனக்குள் இருந்தது. எனக்கு வாய்ஸ் நல்லா இருக்கும். அதனால் ஆர்ஜே அல்லது விஜே பண்ணலாம் என்று முடிவு செய்தேன். அப்பத்தான் என் தமிழ் மேல ஒரு நம்பிக்கை வந்தது. பின் நியூஸ் ரீடராக முடிவு செய்தேன். ஏழு வருஷம் முயற்சி. அதற்கு பின் சன் டிவியில் வாய்ஸ் ஓவர் ஆர்டிஸ்ட் ஆனேன். பிறகு எனது நியூஸ் ரிடிங்ஸ் வாய்ப்பு அமைந்தது. அங்கேயே நியூஸ் வாழ்க்கை போயிட்டு இருந்தது.

- Advertisement -

பிறகு பாலிமர் வாய்ப்பு கிடைத்தது. ஒரு நாலு வருசமாக பாலிமர் லைவ் போய்க்கொண்டு இருக்கிறது. ரொம்ப நன்றாக இருக்கு. எனக்கு பாலிமரில் குறுகிய காலத்திலேயே பெரிய அளவில் ரீச் கிடைத்தது. எல்லார்கிட்டயும் பாராட்டுகள் கிடைக்கும் போது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. எனக்கு தமிழ், ஆங்கிலம் இரண்டுமே ஒன்று தான். அதேசமயம் இரண்டிலுமே உச்சரிப்பு நன்றாக வரும். மேலும், நியூஸ் ரீடர் ஆக எனக்கு பிடித்தது முதல்ல பெப்சி உமா.

இப்ப இருக்க எல்லோருக்கும் அவங்க தான் முன்னோடி. அதற்கு பிறகு டிடி. அவங்க நிகழ்ச்சியில் என்ன நடந்தாலும், பிரச்சனையானாலும் செம்ம அழகா மேனேஜ் பண்ணுவாங்க. அப்புறம் ரியோ. அவர் செம ஜாலியா பேசுவாரு. தூர்தர்ஷன் ஷோபனாவை மறக்கவே முடியாது. ஒரு கலர்ஃபுல் ஜுவல்ஸ், சேலை ஒரு பில்டப் எதுவும் கிடையாது. ஏன் நம்ம வீடுகளில் அப்போ பிளாக் அண்ட் வொயிட் டிவி தான். அதிலேயே அவங்க செம கெத்து காட்டுவாங்க. அவர்களைப் பார்ப்பதற்காகவே நியூஸ் பார்த்த காலம் அது.

-விளம்பரம்-

அவர்களுடைய வார்த்தை உச்சரிப்பு ரொம்ப அழகாக இருக்கும். நான் நியூஸ் ரீடர் ஆன பிறகு எல்லோரும் என்னுடைய போன் நம்பரை வாங்கி பாராட்டுவது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. இப்ப வரைக்கும் ஆச்சரியமாக நான் நினைப்பது சேலத்தில் இருந்து ஒரு தம்பதி சென்னை வந்து இரண்டரை சவரனில் ஒரு தங்க செயின் கொடுத்துவிட்டுப் போனாங்க. நான் வேண்டாம் என்று சொல்லியும் ரெண்டு பேரும் வற்புறுத்திக் கொடுத்து விட்டு போனார்கள். அப்படி ஒரு பரிசு கொடுத்து என்னைப் பாராட்டும் போது எனக்கு ரொம்ப பெருமையாக பொறுப்புணர்வும் இருந்தது.

அதை காப்பாத்தணும். நியூஸ் ரீடர் மட்டுமில்லாமல் அதன் மூலம் எனக்கு ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் வாய்ப்பும் வந்திருக்கிறது. அதன் மூலமாக என்னை நிரூபிக்கலாம் என்று நினைக்கிறேன். ஒரு 40 நாள் நிகழ்ச்சி என்று வைத்துக் கொள்ளுங்களேன் என்று கூறியிருந்தார். இப்படி ரஞ்சித் கூறியதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போகிறார் என்று கூறப்படுகிறது. கூடிய விரைவில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கப்படுகிறது. இதில் யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள்? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ரஞ்சித் பிக் பாஸுக்கு போவதாக அறிவித்திருக்கும் அறிவிப்பு சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

Advertisement