காட்டுக்கு ஒரு சிங்கம் தான்.. அது நான் தான் – பிக் பாஸில் இருந்து வெளியில் வந்தவுடன் முதல் வீடியோ வெளியிட்ட அசீம்.

0
473
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் நிறைவடைந்தது 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த இறுதிப்போட்டியில் அசீம், விக்ரமன் சிவின் ஆகிய மூன்று பேர் தகுதி பெற்று இருந்தார்கள். இதில் அசீம் முதலிடத்தையும் அவரைத் தொடர்ந்து விக்ரமன் மற்றும் சிவின் ஆகிய இருவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்து இருந்தார்கள். முதல் பட்டத்தை வென்ற அசிமிற்கு 50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், அவருக்கு சிறப்பு பரிசாக ஒரு புதிய மாருதி கார் வழங்கப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

பிக் பாஸ் கோப்பையை வென்ற அசீம் :

இந்த பிக் பாஸ் சீசனில் விக்ரமன் தான் வெல்வார் என்று பலரும் எதிர்பார்த்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் அசீம் வென்றதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இந்த முடிவால் அதிருப்தி அடைந்து இருக்கின்றனர். அதே போல பொதுவாக வெற்றியாளரை தான் முதலில் பேச வைப்பார்கள். ஆனால், அஸீமிடன் கோப்பையை கொடுத்துவிட்டு கமல், விக்ரமனை தான் முதலில் பேச வைத்தார். இதையெல்லாம் காரணமாக சொல்லி நெட்டிசன்கள் பலரும் கமலுக்கே அசீம் வென்றது பிடிக்கவில்லை என்பது போல கூறி வருகின்றனர். இந்த சீசன் ஆரம்பித்ததில் இருந்தே அசீம் மற்றும் விக்ரமனுக்கு தான் அடிக்கடி சண்டை வந்தது.

- Advertisement -

அப்படி சண்டை வரும் போதெல்லாம் வார இறுதியில் பஞ்சாயத்து செய்யும் கமல், பெரும்பாலும் விக்ரமன் பக்கம் நின்று தான் நியாயம் பேசினார். விக்ரமன் ஒரு அரசியல் கட்சியை சேர்த்தவர் என்பதால் தான் விக்ரமனுக்கு கமல் ஆதரவாக பேசுகிறார் என்று அடிக்கடி அசீம் ரசிகர்கள் விமர்சனம் செய்து வந்தனர். பலரும் விக்ரமன் தான் வெற்றிபெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அசீம் வெற்றி பெற்றது பெரும் அதிர்ச்சியை கொடுத்து.

அசீம் லைவில் பேசியது :

இந்நிலையில் பிக் பாஸிற்கு பிறகு முதன் முறையாக லைவிற்கு வந்த அசீம் அந்த விடியோவில் பல தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்திருந்தார். அவர் கூறுகையில் “பிக் பாஸ் வீட்டில் இருந்த வரைக்கும் மணிகண்டனை தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறினார். அதோடு பிக் பாஸ் வீட்டில் தன்னுடைய உண்மையான முகத்தை காட்டாதது ரட்சிதா என்றும், மகேஷ்வரி பாம்பு என்று, ஷிவின் அந்த பம்பாயை தூக்கி சாப்பிடும் கழுகு என்றும் கூறினார், மைனாவை முதலை என்றும், சிங்கம் என்று தன்னை தானே சொல்லிக்கொண்டார்.

-விளம்பரம்-

விக்ரமன் குறித்து அசீம் கூறியது :

என்னிடம் வெளியில் வந்தவுடன் விக்ரமன் பற்றி கேட்டார்கள். அதற்கு பதிலளித்த அசீம் “சொல்லப்போனால் விக்ரமன் என்னுடைய ஒரு நல்ல நண்பன். வீட்டிற்குள் நடந்தது கோபத்தினால் மட்டுமே தவிர கொள்கை ரீதியாகவோ, கோட்பாட்டு ரீதியாகவோ எந்த பிரச்சனையும் கிடையாது. நாங்கள் அவ்வளவு சண்டை போட்டிருந்தாலும் விக்ரமனும் நானும் பல விஷியங்களை பகிர்ந்திருக்கிறோம். அவரிடம் பிடித்த விஷயம் என்ன கோவப்பட்டாலும் தன்னுடைய நிலை மாறாமல் அப்படியே இருப்பர். பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது எங்களுக்கு இடையே எந்த பிரச்சனையும் கிடையாது. நாங்கள் வெளியில் பார்த்தாலும் கூட இருவரும் நலம் விசாரித்துக்கொள்ளும் படிதான் பேசுவோம்.

அனைவருக்கும் நன்றி :

ஆனால் இதனை பிக் பாஸில் காட்சிப்படுத்தும் போது தப்பாக மாற்றியதுதான் வருத்தமாக இருக்கிறது எனக் கூறினார்.மேலும் அவர் கூறுகையில் பிக் பாஸில் நடக்கும் சண்டைகளை வைத்து மட்டுமே ஒருவரை எடை போடமுடியாது என்றும், நான் அந்த வீட்டில் இருப்பது முக்கியம் என்று செய்தாலும் நான் செய்யும் விஷியத்தில் நியாயம் இருக்கும் என்று தெரிந்து எனக்கு வாக்களித்த ஒவ்வொரு மக்களுக்கும், தாய்மார்களுக்கும், சிறிய குழந்தைகள் முதற்கொண்டு பெரியவரக்ள் வரை அனைவர்க்கும் நன்றி என்றும் கூறினார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement