பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர் அருண் பிரசாத் குறித்து,பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா போட்டிருக்கும் பதிவு தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி இன்று 52வது நாள். இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.
முதலில் நிகழ்ச்சியிலிருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா ஆகியோர் வெளியேறி இருந்தார்கள். அதன்பின் நிகழ்ச்சியை சுவாரஸ்யம் ஆகும் வகையில், வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக ஆறு பேர் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து இருந்தார்கள். அதில் வர்ஷினி வெங்கட், ராயன், ராணுவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் என்ட்ரி கொடுத்திருந்தார்கள். மேலும், கடந்த வாரம் நாமினேஷனில் குறைவான வாக்குகளை வர்ஷினி, சிவகுமார், சாச்சனா பெற்றிருந்தார்கள். கடைசியில் வர்ஷினி எலிமினேட் ஆகியிருந்தார்.
அர்ச்சனா மற்றும் அருண் காதல்:
இதற்கிடையே, பிக் பாஸ் 8 போட்டியாளர் அருண் பிரசாத்துக்கு ஆதரவாக , கடந்த சீசன் டைட்டில் வின்னரான அர்ச்சனா பதிவுகளை போட்டுக் கொண்டு வந்தார். அதேபோல் சமீபத்தில் கூட அர்ச்சனாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி அருண் பிரசாத் பேசி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி இருந்தது. அதற்கு அர்ச்சனா, நன்றி சொல்லி அருண் பேசிய வீடியோவை ஷேர் செய்து இருந்தார். அதோடு கடந்து வந்த பாதை டாஸ்க்கில் கூட, அருண்பிரசாத் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறியிருந்தார்.
அர்ச்சனா பதிவு :
இதன் மூலம் அர்ச்சனா- அருண் காதலிப்பது உறுதியாகி இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் அர்ச்சனா கடந்த சீசன் ஜெயித்தது எப்படி என அருண் பிரசாத் சில இடங்களில் கூறிய விஷயங்களால் தற்போது நெட்டிசன்கள் அர்ச்சனாவை ட்ரோல் செய்து வருகிறார்கள். அதோடு பிக் பாஸ் வீட்டில் அருண் செய்யும் சில விஷயங்களுக்காக இனையவாசிகள் அர்ச்சனாவை திட்டி பதிவிட்டு வருகிறார்கள். இந்நிலையில் அர்ச்சனா இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை போட்டிருக்கிறார்.
நான் பொறுப்பேற்க முடியாது:
அதில், என் வாழ்க்கையில் நான் இந்த இடத்திற்கு வர ஒவ்வொரு அடியிலும் பெரும் சவால்கள், விமர்சனங்கள், எண்ணற்ற தியாகங்களை சந்தித்து இருக்கிறேன். அந்தக் கடின உழைப்பை யாரும் கவனிக்கவில்லை என்பதை நினைக்கும் போது, மிகுந்த வேதனை அடைகிறேன். அருண் பிரசாத் நானும் வெவ்வேறு விருப்பங்களை கொண்ட இரண்டு தனித்தனி நபர்கள். எனக்கு இருக்கும் மற்ற நண்பர்களைப் போலவே நான் அவரை ஆதரிக்கிறேன். ஆனால், அவருடைய செயல்களுக்கு நான் எந்த வகையிலும் பொறுப்பேற்க முடியாது. இந்த இடத்திற்கு வர நான் கடுமையாக போராடி இருக்கிறேன்.
I’ve poured my heart and soul into building the life I have today. Every step of the way, I’ve faced challenges, criticism, and countless sacrifices to stand where I am. It’s devastating to see all that hard work being overlooked and my name dragged into something I have no…
— Archana Ravichandran (@Archana_ravi_) November 26, 2024
என்னை விமர்சிக்க வேண்டாம்:
ஆனால், அந்தப் போராட்டத்தை மக்கள் மறந்து விடுவதை நினைத்து என் மனம் உடைந்து போய் உள்ளது. நீங்கள் எனக்கு காட்டிய அன்பு, ஆதரவை நான் எப்போதும் மதிக்கிறேன். ஆனால், நான் செய்யாத ஒரு செயலுக்காக நீங்கள் என்னை விமர்சிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். பிக் பாஸில் உள்ள ஒவ்வொருவரும் வீட்டிற்குள் தெளிவாக விளையாடி வருகிறார்கள். நான் இங்கே இருக்கிறேன். தயவுசெய்து நானும் மனிதன் தான் என்பதை மறந்து விடாதீர்கள். இது வார்த்தைகளால் சொல்ல முடியாத வலியாக உள்ளது என்று அர்ச்சனா உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார்.