பிக் பாஸ் அருணை சொந்தம் கொண்டாடும் பெண், அப்போ அர்ச்சனா- குழப்பத்தில் ரசிகர்கள்

0
192
- Advertisement -

பிக் பாஸ் 8 அருண் குறித்த செய்தி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் மூலம் பிரபலமானவர் அருண் பிரசாத். அந்த சீரியலில் இவர் பாரதி என்னும் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார். அதன் பின் விஜய் டிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி சமீபத்தில் முடிந்த ‘பிக் பாஸ் 8 ‘ நிகழ்ச்சியில் போட்டியாளராக அருண் கலந்து கொண்டார். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, ரஞ்சித், விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் 8:

இந்த நிகழ்ச்சியில் முதலில் சில வாரங்கள் அமைதியாக வலம் வந்த அருண், போகப் போக சிறப்பாக விளையாடத் தொடங்கினார். குறிப்பாக இவர் முத்துக்குமரனுடன் அதிகம் சண்டை போட்டிருந்தார். அதேபோல், நிகழ்ச்சியில் யாருக்காவது உடல்நிலை பிரச்சினை அல்லது உதவி என்றால் அருண் முதல் ஆளாக நின்று உதவி செய்திருந்தார். இவர் டாப் 5 போட்டியாளர்களில் ஒருவராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆனார்.இவரின் எலிமினேஷன் எல்லோருக்குமே பேரதிர்ச்சியாக இருந்தது. இவரின் எலிமினேஷன் எல்லோருக்குமே பேரதிர்ச்சியாக இருந்தது.

அருண்-அர்ச்சனா காதல்:

மேலும், இந்த பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் தான் தன்னுடைய காதலி அர்ச்சனாவை அருண் பிரசாத் அறிமுகம் செய்து வைத்தார். அர்ச்சனா ரவிச்சந்திரன் வேறு யாரும் இல்லை, இவர் கடந்த பிக் பாஸ் 7 சீசனின் டைட்டில் வின்னர் தான். அருண் அர்ச்சனாவுக்கு பிக் பாஸ் வீட்டில் இருந்து பேசி பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தது இணையத்தில் வைரல் ஆகி இருந்தது. அதேபோல் அர்ச்சனாவும், அருணுக்கு ஆதரவாக சமூக வலைதள பக்கங்களில் பதிவுகளை பதிவிட்டு வந்திருந்தார். மேலும் அர்ச்சனா, பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்கும் அருணை காண்பதற்காக விருந்தினராக சென்று இருந்தார்.

-விளம்பரம்-

யார் இந்த சுபத்ரா:

தற்போது இவர்களின் திருமணத்திற்கான வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக கூறும் நிலையில், அருண் பிரசாத் தன்னுடைய கணவர் என்று ஒரு பெண் ஒருவர் இன்ஸ்டாவில் சொந்தம் கொண்டாடி வருகிறார். சுபத்ரா அருண் என்கிற அந்த ஐடியில் இருந்து பெண் ஒருவர் அருண் பிரசாத்தின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அதோடு அந்த ஐடியின் பயோவில், என் அர்ஜுனன் என குறிப்பிட்டு அருணின் ஐடியை டேக் செய்துள்ளார். அதோட ஐந்து வருட காதல் எனவும், பாரதியின் கண்ணம்மா எனவும், பெஸ்ட் ஹீரோ 2021 எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

குழப்பத்தில் ரசிகர்கள்:

தற்போது இந்த விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பெண்ணின் பதிவுகளை பார்த்த இணையவாசிகள் ஒருவேளை அருணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டதா என்கிற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர். அதோடு சுபத்ராவின் இந்த பதிவுகளால், அவர் அருணின் ரசிகையா அல்லது மனைவியா என்பது தெரியாமல் ரசிகர்கள் குழம்பிப் போய் உள்ளனர். விரைவில் அருணுக்கு அர்ச்சனாவுடன் திருமணம் நடைபெற உள்ள நிலையில், இதுபோல ஒரு சர்ச்சை கிளம்பி உள்ளதால் அதற்கு அருண் விரைவில் விளக்கம் அளிப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement