அர்ச்சனாவிடம் அதை சொல்ல வேண்டாம்னு தான் சொன்னேன், ஆனால் – பிக் பாஸ் அருண் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி

0
115
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய காதலை அறிவித்தது தொடர்பாக அருண் பிரசாத் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி 105 நாட்கள் நடந்து வெற்றிகரமாக முடிந்தது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

-விளம்பரம்-

இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள்.
அதன் பின் நடந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் ராயன் தான் வெற்றி பெற்றார். பின் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக இந்த பணப்பெட்டி டாஸ்கை பிக் பாஸ் கொடுத்து இருந்தார். இந்த டாஸ்க்கில் ராயன், முத்துக்குமரன், விஷால், பவித்ரா ஆகியோர் பணப்பெட்டி டாஸ்க்கை விளையாடி வெற்றி பெற்று விட்டார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் 8:

ஜாக்குலின் தான் இந்த டாஸ்க்கில் தோல்வி அடைந்திருந்தார். இவரின் எலிமினேஷன் எல்லோருக்குமே பேரதிர்ச்சியாக இருந்தது. மேலும், அனைவரும் எதிர்பார்த்தபடி பிக் பாஸ் நிகழ்ச்சியின் grand finale சுற்று நேற்று நடந்து இருந்தது. முத்துக்குமரன் தான் டைட்டில் பட்டதை வென்று கோப்பையை வாங்கி இருந்தார். இவரை அடுத்து இரண்டாம் இடத்தை சௌந்தர்யா, மூன்றாம் இடத்தை விஷால், நான்காம் இடத்தை பவித்ரா, ஐந்தாம் இடத்தை ராயன் வென்று இருக்கிறார்கள். வெற்றி பெற்றவர்களுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

அருண் பிரசாத் பேட்டி:

இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அருண் பிரசாத் அளித்த பேட்டியில், பிக் பாஸ் வீட்டில் நான் எவிக்ட் ஆகும்போது மொத்தமாக எட்டு பேர் தான் இருந்தோம். நான் வெளியே வந்து இரண்டு நாட்களிலேயே மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு போகவேண்டும் என்று சொன்னார்கள். அந்த சமயம் எனக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் தான் நான் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் போகவில்லை. பிக் பாஸ் வீட்டிற்குள் போக முடியாததை நினைத்து நான் ரொம்பவே வருத்தப்பட்டேன். நிறைய பேர் என்னை மிஸ் செய்ததாகவும் சொன்னார்கள். நான் சோசியல் மீடியாவை பெரிதாக பார்க்க மாட்டேன்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி சொன்னது:

அப்படி பார்த்த கமெண்ட்களில் எல்லோருமே, நான் டீசன்டாக கேம் விளையாடி இருக்கிறேன் என்று சொன்னார்கள். நான் வெளியில் எப்படி இருந்தேனோ, அப்படிதான் பிக் பாஸில் இருந்தேன். ஒரு ஆண் அழக்கூடாது என்று சொன்னார்கள். அது தவறான விஷயம். எமோஷன் என்பது எல்லோருக்குமே ஒன்றுதான். நான் நானாகத்தான் இருந்தேன். அதில் குறை, நிறைகள் எது சொன்னாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன். முத்துக்குமரன் வெற்றி பெற்றதில் எனக்கு ரொம்பவே சந்தோஷம். அவர் அதற்கு தகுதியானவர்தான். அதேபோல் ஜாக்லின் டாப் 2வில் வருவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், பணப்பெட்டி டாஸ்க்கில் அவர் வெளியேறி விட்டார்.

அர்ச்சனா பற்றி சொன்னது:

15 வாரங்கள் நாமினேட் ஆகியும் அவர் வெளியே போகாமல் பயங்கரமாக விளையாடியிருந்தார். அவர் பைனலில் இல்லாதது தான் எனக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எனக்கு நிறைய பாசிட்டிவான கமெண்ட்ஸ் வந்திருக்கிறது. மேலும், பிக் பாஸ் வீட்டில் என்னுடைய ஹார்லி குயினை அறிமுகப்படுத்திய விஷயம் திடீரென்று நடந்ததுதான். கடந்த ஆண்டு அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போகும் போது இதைப் பற்றி எல்லாம் சொல்லாதீர்கள். சரியான நேரம் வரும்போது பேசிக் கொள்ளலாம் என்று சொன்னேன். ஆனால், இந்த பிக் பாஸில் ஃப்ரீஸ் டாஸ்க்கில் தெரியப்படுத்திய விஷயம் எங்களுக்கு ஆசீர்வாதம் என்று நினைக்கிறோம் என பல விஷயங்களை கூறியிருக்கிறார்.

Advertisement