பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தீபக் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி 105 நாட்கள் நடந்து வெற்றிகரமாக முடிந்தது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள்.
அதன் பின் நடந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் ராயன் தான் வெற்றி பெற்றார். பின் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக இந்த பணப்பெட்டி டாஸ்கை பிக் பாஸ் கொடுத்து இருந்தார். இந்த டாஸ்க்கில் ராயன், முத்துக்குமரன், விஷால், பவித்ரா ஆகியோர் பணப்பெட்டி டாஸ்க்கை விளையாடி வெற்றி பெற்று விட்டார்கள்.
பிக் பாஸ் 8:
ஜாக்குலின் தான் இந்த டாஸ்க்கில் தோல்வி அடைந்திருந்தார். இவரின் எலிமினேஷன் எல்லோருக்குமே பேரதிர்ச்சியாக இருந்தது. மேலும், அனைவரும் எதிர்பார்த்தபடி பிக் பாஸ் நிகழ்ச்சியின் grand finale சுற்று நேற்று நடந்து இருந்தது. முத்துக்குமரன் தான் டைட்டில் பட்டதை வென்று கோப்பையை வாங்கி இருந்தார். இவரை அடுத்து இரண்டாம் இடத்தை சௌந்தர்யா, மூன்றாம் இடத்தை விஷால், நான்காம் இடத்தை பவித்ரா, ஐந்தாம் இடத்தை ராயன் வென்று இருக்கிறார்கள். வெற்றி பெற்றவர்களுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.
தீபக் பேட்டி:
இப்படி இருக்கும் நிலையில் நிகழ்ச்சிக்கு பிறகு அளித்த பேட்டியில் தீபக், தமிழக மக்களுக்கு இந்த நிகழ்ச்சியின் மூலம் தீபக் யார் என்பது நன்றாக தெரிந்திருக்கும். இந்த பரிமாணத்துக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் நான் நன்றி சொல்லிக் கொள்ளணும். என்னுடைய கேம் எங்க முடிந்தது என்று தெரியவில்லை. மக்கள் ஓட்டு போட மறந்துருக்கலாம். ஆனால், நான் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறேன் என்று நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
முத்துக்குமரன் பற்றி சொன்னது:
என்னுடைய தம்பி முத்துக்குமரன் டைட்டில் வென்றது எனக்கு ரொம்ப சந்தோஷம். அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. என்னுடைய நடவடிக்கைகளிலேயே தெரிந்திருக்கும். முத்து டைட்டிலை மட்டும் ஜெயிக்கவில்லை. தமிழ்நாட்டையுமே வென்றிருக்கிறான். முத்துவிடம் எனக்கு ரொம்ப பிடித்த விஷயம் அவனுடைய பக்குவம் தான். அவனுடைய பெற்றோர் அவனை ரொம்ப அழகாக வளர்த்திருக்கிறார்கள். முத்து வெளிவந்த பிறகு குடும்பத்தோடு எங்க வீட்டில் தான் தங்கியிருந்தான். அவன் வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. என்னுடைய மகனும் முத்துவும் ரொம்ப பிரன்ட்ஸ் ஆகிட்டார்கள்.
தன் மனைவி பற்றி சொன்னது:
பிக் பாஸ் வீட்டில் ‘கேப்டன்’ இப்படித்தான் இருக்கணும் என்று பிக் பாஸ் சொன்ன விஷயம் எனக்கு ரொம்பவே பெருமையாக உணர வைத்தது. பிக்பாஸ் வீட்டிற்குள் ஒரு சமயத்தில் எனக்கும் அருணுக்கும் சண்டை வந்த போது நான் கஷ்டப்பட்டதை விட அந்த விஷயத்தை அவனுக்கு நாம் புரிய வைக்கணும் என்று தான் இருந்தேன். அவன் கோபப்பட்டான், நானும் கோபப்பட்டேன். அந்த சமயத்தில் வார்த்தைகள் தவறாக போகுது என்று உணர்ந்து அவனிடம் நான் பேசினேன். மேலும், பிக் பாஸ் வீட்டுக்குள் போகும்போதே என்னுடைய நண்பன் சஞ்சீவிடம் கேட்டிருந்தேன். ஜாலியாக இருக்கும், போயிட்டு வா என்று சொன்னான். வெளியில் வந்த பிறகு என்னிடம், நீ சூப்பராக கேம் விளையாடின என்று சொன்னார். நான் வெளியில் பி ஆர் வைக்கவில்லை. என் மனைவி தான் எனக்கு பெரிய பி ஆர். ஆர்கானிக்காக மக்களோடு அன்பு கிடைத்தது என்று பல விஷயங்களை மனம் திறந்து பேசி இருக்கிறார்.