எனக்கும் செளந்தர்யாவுக்குமான உறவு இது தான் – பிக் பாஸ் ரயான் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி

0
161
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ரயான் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரயான். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் வில்லனாக நடித்திருந்தார். இந்த முதல் சீரியலிலேயே இவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்ப்பு கிடைத்தது. இதை தொடர்ந்து இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பனிவிழும் மலர்வனம் என்ற சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் இவருக்கு பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-

விஜய் டிவி பிக் பாஸ் 8 நிகழ்ச்சி வெற்றிகரமாக சமீபத்தில் தான் முடிவடைந்தது. இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி இருந்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாளிலிருந்தே ராயன் சிறப்பாக விளையாடி வந்தார். மேலும், சிறப்பாக விளையாடி டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் கூட ராயன்தான் வெற்றி பெற்றார். இதனால் ரசிகர்களிடையே இவருக்கு ‘டாஸ்க் பீஸ்ட்’ என்ற பட்டப்பெயரும் கிடைத்தது. பின், நிகழ்ச்சியில் கடைசியாக நடந்த பணப்பெட்டி டாஸ்க்கில் ராயன் சிறப்பாக விளையாடி ரூபாய் 8 லட்சம் வரை வென்றார். ஆனால், இந்த சீசனில் ராயன் நான்காம் இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பிக் பாஸ் 8:

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ராயன் தான் நடித்து கொண்டிருந்த பனிவிழும் மலர்வனம் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ‘பனிவிழும் மலர்வனம்’ . இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் சித்தார்த், வினுஷா தேவி, ஷில்பா ஆகியோர் நடித்து வந்தார்கள். இந்த சீரியல் அக்கா- தம்பி மற்றும் அண்ணன்-தங்கை இடையே நடக்கும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ரயான் இந்த சீரியலில் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவர் சீரியலில் இருந்து விலகி உள்ளாராம்.

ரயான் நடித்த படம்:

தற்போது இவர் சில படங்களில் கமிட்டாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேழும், சமீபத்தில் வெளிவந்த Mr. ஹவுஸ் கீப்பிங் படத்தில் முக்கிய வேடத்தில் பிக் பாஸ் ராயன் நடித்து இருந்தார். இயக்குனர் அருண் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கும் இப்படத்தில் லாஸ்லியா, அருண் பாஸ்கர், ராயன், இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்தப் படத்தில் ரயானின் நடிப்பு பாராட்டைப் பெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ரயான், பிக் பாஸ் நிகழ்ச்சி என் வாழ்க்கையில் ஒரு மைல் ஸ்டோன்.

-விளம்பரம்-

நிகழ்ச்சி பற்றி சொன்னது:

இந்த தருணத்தில் தான் என்னுடைய படமும் வெளியாகி இருக்கிறது. அனைத்து பக்கங்களில் இருந்தும் எனக்கு பாசிட்டிவான ரெஸ்பான்ஸ் தான் கிடைத்திருக்கிறது. நன்றியைத் தாண்டி என்ன சொல்வதென்றே எனக்கு தெரியவில்லை. எனக்கு வெளியில் இருந்து ஊக்கம் கொடுக்கிற மாதிரி ஒரு புஷ் தேவைப்பட்டது அந்த சமயத்தில் என்னுடைய அக்கா நிகழ்ச்சிக்குள் வந்தார். எனக்கு புரிகின்ற வகையில் பல விஷயங்கள் சொன்னார். டாஸ்க் பீஸ்ட் என்ற பெயர் அக்கா தான் சொல்லிட்டு போனார். முத்துக்குமரன் தன்னுடைய விளையாட்டுக்காக ரொம்பவே உழைப்பு போட்டார் அதனால்தான் அவருக்கு வெற்றியும் கிடைத்தது.

சௌந்தர்யா பற்றி சொன்னது:

கோவா கேங்க் நட்பு இனிமேலும் கண்டிப்பாக தொடரும். நான், ஜாக்லின், சௌந்தர்யா தான் கோவா கேங்.
சௌந்தர்யாவோட தனித்துவம் அவங்க அவங்களாகவே இருப்பது தான். அவங்களை மாதிரி யோசிக்க முடியாது, இருக்க முடியாது. அதேபோல் நிகழ்ச்சியை பார்த்து என்னை-சௌந்தர்யாவை பற்றி வெளியே வேற மாதிரி பேசி இருந்தார்கள். ஆனால், சௌந்தர்யாவுக்கும் எனக்கும் இடையே ஒரு புரிதல் இருக்கிறது.
எங்க ரெண்டு பேருக்குமே நல்ல தெளிவு இருப்பதினால் தான் எங்களை அந்த கமெண்ட்ஸ் பாதிக்கவில்லை. நாங்கள் இருவருமே நல்ல நண்பர்கள் என்று கூறி இருக்கிறார்.

Advertisement